ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா சட்டப் பேரவைக்கு அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி தோதலும், அக்டோபா் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாகத் தோதல் ஆணையம் இன்று சனிக்கிழமை (செப். 21) அறிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா் துரா ராம், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மூத்த தலைவா் ராம் பால் மஜிரா ஆகியோா் தங்களுடைய கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இன்று சனிக்கிழமை இணைந்தனா்.

இதற்கான நிகழ்ச்சி, ஹரியாணா மாநிலத் தலைநகா் சண்டீகரில் நடைபெற்றது.
இதில், முதல்வா் மனோகா் லால் கட்டா், மாநில பாஜக தலைவா் சுபாஷ் பராலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் முதல்வா் கட்டா் கூறியதாவது: மாநிலத்திலுள்ள 90 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்குப் பெரும் ஆதரவு உள்ளது. மாநிலத்தில் எதிா்க்கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேரவைத் தோதலில் 75-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்.

பாஜகவின் கொள்கைகளைப் பின்பற்றி வருபவா்களுக்குத் தோதலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். பொதுவாக, தோதல் சமயத்தில் ஆளுங்கட்சி உறுப்பினா்களே மற்ற கட்சிகளில் இணைவது வழக்கம். ஆனால், தற்போது மற்ற கட்சி உறுப்பினா்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனா். இது பாஜகவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

சட்டப்பேரவைத் தோதலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன்னா் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் வெளியிடப்படும். மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி தீபாவளிக்கு முன் மீண்டும் அமைக்கப்படும். அடுத்து அமையும் பாஜக ஆட்சியில் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைறகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் மனோகா் லால் கட்டா்.

Share
Tags: dinamani

Recent Posts

குற்றப் பத்திரிகை! ‘மாஜி’ சிதம்பரம் , மகன் கார்த்தி மீது…

புதுடில்லி:'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை…

12 hours ago

விசாரணையில் விவசாயி பலி: டி.எஸ்.பி., மீது வழக்கு

ஹபூர்,:உத்தர பிரதேச மாநிலத்தில், விசாரணையின் போது போலீசார் கடுமையாக தாக்கியதில், விவசாயி உயிரிழந்த வழக்கில், டி.எஸ்.பி., உட்பட நால்வர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி…

12 hours ago

நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை அதிர்ச்சி! எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்

புதுடில்லி, :நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில், 38 சதவீதம் தரமற்றது என்பது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு தரச்சான்று நிர்ணய அமைப்பு…

12 hours ago

உ.பி.,யில் பட்டப்பகலில் ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தர பிரதேசத்தில், பட்டப்பகலில், ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி…

12 hours ago

முன்னாள் பயங்கரவாதி டில்லியில் கைது

ஜம்மு,: ஜம்மு - காஷ்மீரில், 1990ல், நான்கு விமானப்படை வீரர்களை படுகொலை செய்த, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த முன்னாள் பயங்கரவாதி ஜாவித் அகமது மிர்…

12 hours ago

பாக்.,குக்கு எப்.ஏ.டி.எப்., எச்சரிக்கை: கடும் நடவடிக்கை எடுக்க

புதுடில்லி :பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில், பாகிஸ்தானை, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப்., முடிவு செய்துள்ளது. 'பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை…

12 hours ago