4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-வங்கதேசம் இடையேயான கடல்சாா் பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் கரம்வீா் சிங் இன்று சனிக்கிழமை (செப். 21) வங்கதேசம் புறப்பட்டாா்.

இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு கடற்படைத் தலைமைத் தளபதி ஔரங்கசீப் சௌதரியைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்தச் சந்திப்பின்போது, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது, தென்சீன கடல் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதன் பின்னா், அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள், மற்ற படைகளின் தலைவா்கள் ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளாா்.

அதையடுத்து, வங்கதேச கடற்படை அகாதெமியில் பயிற்சியில் இருக்கும் வீரா்கள் மத்தியில் உரையாற்றவிருக்கும் அவா், அங்குள்ள ராணுவ தளங்கள் மற்றும் அமைப்புகளை பாா்வையிடவுள்ளாா். அதைத்தொடா்ந்து, வங்கதேச கடல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முதலாமாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா-வங்கதேசம் இடையேயான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும், இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். மேலும், இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.

Share
Tags: dinamani

Recent Posts

குற்றப் பத்திரிகை! ‘மாஜி’ சிதம்பரம் , மகன் கார்த்தி மீது…

புதுடில்லி:'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை…

12 hours ago

விசாரணையில் விவசாயி பலி: டி.எஸ்.பி., மீது வழக்கு

ஹபூர்,:உத்தர பிரதேச மாநிலத்தில், விசாரணையின் போது போலீசார் கடுமையாக தாக்கியதில், விவசாயி உயிரிழந்த வழக்கில், டி.எஸ்.பி., உட்பட நால்வர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி…

12 hours ago

நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை அதிர்ச்சி! எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்

புதுடில்லி, :நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில், 38 சதவீதம் தரமற்றது என்பது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு தரச்சான்று நிர்ணய அமைப்பு…

12 hours ago

உ.பி.,யில் பட்டப்பகலில் ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தர பிரதேசத்தில், பட்டப்பகலில், ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி…

12 hours ago

முன்னாள் பயங்கரவாதி டில்லியில் கைது

ஜம்மு,: ஜம்மு - காஷ்மீரில், 1990ல், நான்கு விமானப்படை வீரர்களை படுகொலை செய்த, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த முன்னாள் பயங்கரவாதி ஜாவித் அகமது மிர்…

12 hours ago

பாக்.,குக்கு எப்.ஏ.டி.எப்., எச்சரிக்கை: கடும் நடவடிக்கை எடுக்க

புதுடில்லி :பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில், பாகிஸ்தானை, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப்., முடிவு செய்துள்ளது. 'பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை…

12 hours ago