இந்தியா பாகிஸ்தான் இன்றைய மோதலுக்கு பிரிட்டிஷ் அரசே காரணம்; ஈரான் தலைவா் குற்றச்சாட்டு.!

காஷ்மீர் மக்களுக்கதன கிடைக்க வேண்டிய நியாயமான கொள்கையை இந்தியா அரசாங்கம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என ஈரான் தலைவர் கூறி உள்ளார்.

மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவை ரத்து செய்தது.

மேலும் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.வில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்டு வந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவி உள்ளது.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள பிரான்சிடம் பாகிஸ்தான் இந்தியா மீது புகார் கூறி உள்ளது.

இந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுகப்போவதாக பாகிஸ்தான் கூறிய ஒரு நாள் கழித்து, ஈரான் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி காஷ்மீர் பிரச்சனை குறித்து தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா சையத் அலி கமேனி, காஷ்மீரில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து மிகவும் கவலைபடுவதாக தெரிவித்தார்,

இது குறித்து அவர் கூறியதாவது :-

காஷ்மீர் மக்களுக்காக ஒரு நியாயமான கொள்கையை முன்னெடுக்கும் என இந்திய அரசை ஈரான் எதிர்பார்க்கிறது.

காஷ்மீரில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.

இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. இந்திய அரசாங்கம் காஷ்மீரின் உன்னத மக்களுக்கு ஒரு நியாயமான கொள்கையை பின்பற்றி இந்த பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

‘காஷ்மீரில் தற்போதைய நிலைமை மற்றும் இது தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்களுக்கு காரணம்,

இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும் போது, மோசமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவேயாகும்.

காஷ்மீரில் தொடர்ந்து மோதல் நடைபெற வேண்டும் என்று பிரிட்டிஷ் வேண்டுமென்றே இந்த பிராந்தியத்தில் இந்த காயத்தை விட்டுவிட்டு சென்று உள்ளது என கூறினார்.

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

10 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

10 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

2 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

2 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

2 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

2 hours ago