பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விதி என் 370 நீக்கப்பட்டதை அடுத்துக் கடந்த ஐந்தாம் தேதி முதல் மாநிலத்தின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் பலமான ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. ஆனால் எந்த இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருந்தன.

இதையொட்டி ஜம்மு, கத்துவா, சம்பா, உதம்பூர், மற்றும் நியாசி ஆகிய 5 மாவட்டங்களில் 144 உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை அச்சமின்றி நடத்தினர். இயல்பு நிலை திரும்பியதால் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. நாளை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் தினமாகும். முக்கியமான இடங்களில் ஆயுதம் ஏந்திய காவலர் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

நாளை பக்ரீத் பண்டிகை என்பதால் நேற்று இரவு முதல் மாநிலம் எங்கும் சிறிது சிறிதாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துணிமணி உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் கடைவீதிகளுக்கு மக்கள் பெருமளவில் வந்துள்ளனர். உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சிக் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

இணையச் சேவை இன்னும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாய் வழியாகப் பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. தற்போது காஷ்மீரில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மக்களிடம் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago