தண்ணீர் பற்றாக்குறை தீர வாய்ப்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீஷைலம் அணையில் இருந்து தண்ணீர் திறந்தது ஆந்திர அரசு

ஐதராபாத்: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆந்திர அரசு தண்ணீர் திறந்தது. தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீரை கூடுதலாக திறந்து விடும்படி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேற்று நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வேலுமணி, டி.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தனர். பிறகு மாலை 4.30 மணிக்கு விஜயவாடாவில் இருந்து சென்னை வந்தனர். அப்போது, அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் நாங்கள் ஆந்திர மாநிலம் சென்று அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தோம். நமக்கு தெலுங்கு கங்கா திட்டத்தில் தரவேண்டிய கிருஷ்ணா தண்ணீரை பெறுவதற்காக சென்றோம்.
முதலமைச்சர் எடப்பாடி கொடுத்த கடிதத்தை அவரிடம் கொடுத்து வேண்டுகோள் விடுத்தோம். இதற்கு முன்னால் தரவேண்டிய தண்ணீரை அவர்கள் வறட்சியை காரணம் காட்டி தரவில்லை.தற்போது ஸ்ரீசைலத்தில் நல்ல நீர்வரத்து இருக்கிறது. எனவே இப்போது அவர்கள் தண்ணீர் தர வாய்ப்புள்ளது. நாங்கள் அதை கேட்டதும் ஜெகன் மோகன் ரெட்டி தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக ஸ்ரீசைலத்தில் இருந்து சோம சீலாவிற்கும் பிறகு சோமசீலாவில் இருந்து கண்டலேறு அணை மூலம் தண்ணீர்விட அதிகாரிகளை அழைத்து உத்தரவிட்டுள்ளார். சென்னைக்கு இருக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை வேகமாக தீர்க்க முடியும். ஏற்கனவே ஆந்திரா 4 டிஎம்சி தண்ணீர் பாக்கி வைத்துள்ளது. தற்போது இந்த ஆண்டு 4 டிஎம்சி என 8 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். அந்த 8 டிஎம்சி தண்ணீரை தர ஜெகன்மோகன் ரெட்டி ஒத்துக்கொண்டார். இனிமேல் ஜூலை, அக்டோபருக்கான தண்ணீர் உடனே வந்து சேரும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உத்தரவை தொடர்ந்து ஸ்ரீசைலம் அணையில் வினாடிக்கு 7,000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago