மூளைக்காய்ச்சல் பலி 100 ஐ தாண்டியது

பாட்னா : பீகாரில் முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்களோ, முறையான ஏற்பாடுகளோ இல்லை என்று குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.பீகார், முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் குழந்தைகளை இந்த நோய் தாக்கியது. அதிலிருந்து இதுவரை இந்த நோய் பாதிக்கப்பட்டு முதலில் 130 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.’அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது. பலி எண்ணிக்கை 111 இதுவரை கிருஷ்ணா மருத்துவமனையில் மட்டும் 84 பேர் பலியாகினர். கெஜ்ரிவால் மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் இறந்து மொத்தம் 14 பேர் பலியாகியுள்ளனர். வைஷாலி மருத்துவமனையில் 10 குழந்தைகள், 2 பேர் மோதிஹரியிலும் ஒரு குழந்தை பெகுசாராயிலும் பலியாகியுள்ளனர். இதனால், குழந்தைகளின் பலி எண்ணிக்கை, 111 ஐ தொட்டுள்ளது, பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் விரைவு : பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்பூர் சென்று, பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்வையிட உள்ளார். முன்னதாக அவர் பீகார் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பாட்னாவில் ஆலோசனை நடத்தினார். குற்றச்சாட்டு : இதனிடையே முஷாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போதுமான டாக்டர்களோ, மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும், ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தைகள் இறப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவில் 12 மணிக்கு டாக்டர், நர்ஸ் என எவரும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago