13 வயது சிறுமியை நாடக காதலால் ஏமாற்றி சீரழித்த காம கொடூரன்.! பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த நபர்களாலேயே நடைபெற்று வருகிறது. நாடக காதல் என்ற வலையில் விழும் சிறுமிகள்., அவர்களின் வாழ்க்கையை பரிதாபமாக உயிரிழப்பது பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 28 வயதுடைய மனைவியுடன் தமிழக மாநிலத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் காங்கேயம் கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த சமயத்தில்., இந்த தொழிலாளியின் மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால்., குழந்தையை கவனித்துக் கொள்ள அப்பெண்ணின் 13 வயதுடைய தங்கை பீகாரில் இருந்து திருப்பூருக்கு வந்துள்ளார்.
அந்த சமயத்தில்., திருப்பூருக்கு வந்து விழுந்த சிறுமி தனது அக்காவுடன் தங்கி குழந்தைகளை கவனித்து வந்த நிலையில்., அவரின் வீடு அருகே இருந்த அஜித் வர்சால் என்ற 26 வயதுடைய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்த நிலையில்., தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சிறுமியை மயக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து ஊருக்கு சென்று வருவதாக கூறிய இளைஞன் ஊருக்கு சென்ற நிலையில்., மீண்டும் திருப்பூருக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில்., சிறுமியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே இருக்க., இந்த மாற்றத்தை கவனித்த பெண்ணின் அக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்ய கூறியுள்ளார். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து., இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார்.

அந்த விசாரணையில்., அதே பகுதியில் இருந்த வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமானார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த சிறுமிக்கு நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago