முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை: மருத்துவர்கள் திட்டவட்டம்

கொல்கத்தா:

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ள மேற்குவங்க மருத்துவர்கள், மம்தா பானர்ஜியின் அழைப்பை நிராகரித்துள்ளனர்.

நில் ரதன் சிர்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வந்து மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை, பேச்சுவார்த்தை நடத்த தலைமைச் செயலகத்துக்கு செல்லமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பயிற்சி மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக நீடித்தது. இதனால் அரசு மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மருத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பணிக்கு திரும்பாத இளநிலை மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருந்த நிலையில், அதனையும் மீறி போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்களை முதல்வர் பார்க்க வேண்டும், தாக்குதலுக்கு முதல்வர் அலுவலகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில் போராட்டம் கைவிடப்படும் என்று மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மம்தா பானர்ஜி உறுதி

இதற்கிடையே முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் து எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாட்டோம்.

இளநிலை மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். திரும்பியதும் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. யார் மீதும் போலீஸ் நடவடிக்கையை மேற்கொள்ளமாட்டோம் என்றார்.

இந்நிலையில், மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளநிலை மருத்துவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

மருத்துவர்களை பாதுகாக்க தனியாக சட்டம் இயற்றுமாறு மாநில முதல்வர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் திங்கள்கிழமை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago