தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை முடித்து, இன்று 7ம் கட்டமான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 8 மாநிலங்களின் 59 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது.

பீகார்(8), ஜார்க்கண்ட்(3), மத்தியப் பிரதேசம்(8), பஞ்சாப்(13), மேற்கு வங்கம்(9), சண்டிகர்(1), உத்தரப் பிரதேசம்(13), ஹிமாச்சல்(4) ஆகிய தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. முக்கியமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியும் இதில் அடங்கும்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாடு மிகவும் பெரியது. இதற்கு தேர்தலை நடத்துவது மிகப்பெரிய விஷயம். இருப்பினும் விரைவாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் இவ்வளவு இடைவெளி தேவையில்லை

மேலும் பல கட்டங்களாக தேர்தலை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். நாடு முழுவதும் நடக்கும் ஓட்டுப்பதிவில் அதிக இடைவெளி தவிர்க்கப்பட வேண்டும்.

ஓட்டுப்பதிவு முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாக முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை சரியில்லை. இது தொடர்பாக அனைத்து தலைவர்களுடனும் பேசவுள்ளேன். மேலும் அனைவருக்கும் இது தொடர்பாக கடிதமும் எழுதுவேன்… என்றார் நிதிஷ் குமார். இன்று காலை லக்னோவில் உ.பி முதல்வர் யோகி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர்.

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago