கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.

நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. அதற்கு சற்று முன்னர், செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, பின்னர்,தனது இரு நாள் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி.

தனக்கு மிகவும் விருப்பமான இமயமலையின் ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று காலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்துக்கும் சென்று வழிபட்டார் பிரதமர் மோடி!

பாரம்பரிய உடை அணிந்து, கேதர்நாத் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஆன்மிக அதிர்வலைகள் நிறைந்த பனிக்குகையில் இரவு முழுதும் தியானம் செய்தார்.
இதை முன்னிட்டு, அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை தியானம் முடிந்து குகையை விட்டு வெளியில் வந்தார் மோடி.

கேதார்நாத்தில் கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த பக்தர்களை பார்த்து கையசைத்த வண்ணம் தனடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மோடி.

பின்னர் அவர் கேதார்நாத்தில் கூடியிருந்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு அதிகாரிகள் எவரும் அருகில் இன்றி, பத்திரிகையாளர்களுடன் அவர் பேசினார்.

அப்போது அவர், தாம் செய்த பணிகளை எண்ணிப் பார்க்கும் வகையில், தனிமையில் 2 நாட்களை கழிப்பதற்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆன்மிக ஒளியூட்டப்பட்ட புனித தலங்களுக்கு செல்வதை பெருமையாக கருதுவதாகத் தெரிவித்த அவர், அன்றாட நாட்டு நடப்புகளில் இருந்து இரு நாட்கள் சற்று விலகியிருந்து, ஆன்மீக பயணமாக உத்தராகண்ட் வந்துள்ளேன். எனக்காக எதையும் கேட்டு கோவிலுக்கு செல்வதில்லை. கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனக்கும் கேதர்நாத்துக்கும் ஓர் உணர்வுப்பூர்வான உறவு உள்ளது.

கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிக் கொண்டிருக் கிறேன். காணொலிக் காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். மன அமைதி பெற கேதார்நாத்துக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும். எனக்காக எதையும் கேட்டு கோவிலுக்குச் செல்வதில்லை!

வெளிநாடுகளுக்கு செல்வதில் தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் எல்லா இடங்களையும் மக்கள் சுற்றிப் பார்க்க வேண்டும்! என்றார் பிரதமர் மோடி.

அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தேர்தல் வெற்றிக்காகக்கூட பிரார்த்திக்கவில்லையா என கேட்டனர். இல்லை என பதிலளித்த அவர், இறைவன் நமக்கு எல்லாவற்றையும் வழங்கியிருப்பதாக நம்புகிறேன்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசிகள் இருக்க வேண்டும் என்பதே தமது பிரார்த்தனை!.

கேதார்நாத்திற்கும் தனக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட மோடி, 2013ஆம் ஆண்டு பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு கேதார்நாத் மறுசீரமைப்புக்கு திட்டம் தீட்டியதாக கூறினார்.

மக்கள் அனைவரும் நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர், வெளிநாடுகளுக்கு செல்வது தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் வெவ்வேறு இடங்களுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கேதாரத்தில் இருந்து பத்ரியை நோக்கிப் புறப்பட்டார். இன்று காலை பத்ரிநாராயணர் கோவிலுக்கும் சென்று வழிபட்டார் பிரதமர் மோடி.

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago