சுற்றுச்சூழல் இழப்பீடு அபராதம் : நோட்டீஸ் பெற்றவர்களிடம் இருந்து ரொக்கம் வசூல் செய்து தரவேண்டும்

புதுடெல்லி: பிளாஸ்டிக் கழிவுகள், ரப்பர், அச்சு தயாரிப்பில் உருவான பொருட்கள், காய்ந்த இலை, சருகுகள் ஆகியவற்றை எரிப்பதற்கு டெல்லியில் தடை விதித்து கடந்த 2015 ஏப்ரல் 28ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) அறிவித்தது. தடையை மீறுவோர், சுற்றுச்சூழல் இழப்பீடாக குறைந்தபட்சம் ₹5,000 அபராதம் செலுத்த வேண்டும் என என்ஜிடி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டது.அதைத் தொடர்ந்து, தடையை மீறியதாக கிழக்கு மாநகராட்சியின் வடக்கு மற்றும் தெற்கு ஷாதரா மண்டலங்களைச் சேர்ந்த 520 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகையில் ₹9,96,100 வசூலானது. எனினும், நோட்டீஸ் அனுப்பப்பட்ட 520 பேரில் 336 பேர் அபராதம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்து வந்தனர்.
அதுபோல, காற்று மாசு அதிகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 1,403 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ₹63,15,000 வசூல் செய்யப்பட்டது. அதிலும், 1082 பேர் அபராதம் செலுத்தத் தவறினர். இதனிடையே, அபாய கட்டத்தில் இருந்து இதுவரை மீளாமல் இருந்துவரும் டெல்லியின் காற்று மாசு குறித்து, வர்தமான் கவுசிக் என்பவர் என்ஜிடியில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கின் மனுவில், ”தெற்கு டெல்லி பணக்காரர்கள் தங்களது வீடுகளுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு செய்துள்ளனர். பனிக்காலங்களில் அந்த செக்யூரிட்டிகள், குப்பை, இலைசருகு, மரக்கட்டை போன்றவை எரிப்பதால், நச்சுக் காற்று அதிகரிக்கிறது என புகார் கூறியிருந்தார். அந்த வழக்கின் விசாரணை என்ஜிடியில் நேற்று நடந்தது. வீட்டுக்குள் உரிமையாளர்கள் பாதுகாப்பாக இருப்பது போல, செக்யூரிட்டிகளுக்கு ஹீட்டர் அளித்தால், எரிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியவர்களின் பட்டியலை வெளியிடும் அதிகாரம் மட்டுமே தனக்கு உள்ளது என்றும், வசூல் செய்ய அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டு, என்ஜிடிக்கு கிழக்கு மாநகராட்சி சார்பில் தாக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வசூல் செய்வதற்கு அனுமதி பெற்றுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த விவகாரத்தில் தலையிட்டு, அபராதத்தை வசூல் செய்து தரவேண்டும் என அதில் கோரப்பட்டு இருந்தது. மனுதாரர் கவுசிக் தொடுத்த வழக்கின் விசாரணை என்ஜிடியில் நேற்று நடந்தது. என்ஜிடி தலைவர் சுவதந்திர குமார் முன்னிலையில் நடந்த விவாதத்திற்கு கிழக்கு மாநகராட்சி சார்பில் வக்கீல் பலேந்து ஷேகர் ஆஜரானார்.பட்டியலை பார்வையிட்ட பின், வக்கீலிடம் என்ஜிடி தலைவர் எழுப்பிய கேள்வியில், ”கட்டுமான நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் யாரும் தடையை மீறி செயல்படவில்லையா? விதிகளை தீவிரமாக கடைபிடிக்கிறார்களா?”, என்றார்.அதைத் தொடர்ந்துஎன்ஜிடி தலைவர் தீர்ப்பு வழங்கி கூறுகையில், ”சுற்றுச்சூழல் இழப்பீடு அபராதம் வசூல் செய்ய மாவட்ட துணை கலெக்டருக்கு அதிகாரம் வழங்கினோம். ஆனால், இந்த விவகாரத்தை அமல்படுத்தாத மாவட்ட துணை கலெக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். அபராதம் செலுத்த தவறிய தவறு இழைத்தவர்கள் வரும் ஜனவரி 30ம் தேதியன்று நடைபெறும் விசாரணைக்கு தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும்”, என்றார்.நேரில் ஆஜராக உத்தரவுசம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரித்து இருந்தும், என்ஜிடியின் தடை உத்தரவை அமல்படுத்தாத, நொய்டா நகராட்சி துணை ஆணையர் மற்றும் காவல்துறை எஸ்பி ஆகியோர் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் ஜனவரி 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என என்ஜிடி உத்தரவிட்டுள்ளது.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago