“உத்தரப் பிரதேசத்தில் காங். தனித்து போட்டியிடத் தயார்” – ரா‌ஜீவ் பக்ஷி

உத்தரப் பிரதேசத்தில் தனியாக போட்டியிடத் தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரா‌ஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளதால் உத்தரப்பிரதேசம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கு எதிரெதிர் துருவங்களாக காணப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் பாஜகவை வீழ்த்தும் ஒரே நோக்கில் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளன.

சென்ற ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 3 தொகுதிகள் இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்தது.
அப்போது, ஆளுங்கட்சியான பாஜக மூன்றிலும் தோல்வியடைந்தது. குறிப்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதியிலேயே அவர்கள் தோற்றனர். இதனை மையமாக வைத்து தற்போது மீண்டும் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்க உள்ளன.

அதன் தொடர்ச்சியாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இருவரும் கூட்டாக நாளை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதோடு, தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் கொடுப்போம் எனவும் அவர்கள் கூட்டணியில் இடம் பெறுவார்களா இல்லையா என்பது குறித்து தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துவிட்டார். கூட்டணியில் இருந்தால் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கேட்கும் என்ற காரணத்தினால் அக்கட்சிக்கு இந்தக் கூட்டணி முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரா‌ஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 45 தொகுதிகள் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டால், தேசிய கட்சியை முன்னிலைப்படுத்தி மாநில கட்சிகள் வெற்றி பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தனித்துவமாக மக்களுக்கு தெரிய தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே உத்தரப் பிரதேச கா‌ங்கிரஸ் நிர்வாகிகளின் விருப்பம் என்பதால் தனித்து போட்டியிடத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் ராஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

7 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

7 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

7 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

7 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

7 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

7 hours ago