சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு: நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கைத் தாக்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் சாரதா குழும நிறுவனத்திடமிருந்து ரூ.1.4 கோடி பெற்றதான புகாரின் பேரில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சிபிஐ.

சாரதா குழும உரிமையாளர் சுதிப்தா சென்னுடன் நளினி சிதம்பரம் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. அதாவது ஏமாற்று மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தைச் சேர்த்துள்ள சிபிஐ அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் மாதங் சின்ஹ் என்பவரின் மாஜி மனைவி மனோரஞ்சனா சின்ஹ் என்பவரே சாரதா குழும உரிமையாளர் சுதிப்தா சென்னுக்கு நளினி சிதம்பரத்தை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அதாவது செபி, ஆர்.ஓ.சி ஆகிய அமைப்புகளின் விசாரணையை நிர்வகிக்க நளினி சிதம்பரம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் என்றும் இதனையடுத்து நளினி சிதம்பரம் ரூ.1.4 கோடி தொகைப் பெற்றதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

குற்றப்பத்திரிக்கை கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாரதா குழுமம் அதிக வட்டி ஆசை காட்டி பொதுமக்களிடமிருந்து ரூ.2500 கோடி நிதி திரட்டியது. மக்களுக்கு அப்பணம் திருப்பித் தரப்படவில்லை. 2013-ல் நிறுவனத்தை சென் மூடினார். இது மிகப்பெரிய ஊழல் என்று பாஜக, கம்யூனிஸ்ட்கள் அங்கு கடும் விமர்சனங்களை எழுப்பினர்.

2014-ல் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் இது 6வது குற்றப்பத்திரிக்கையாகும்.

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

23 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

23 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

23 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

23 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

23 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

23 mins ago