ஆயுர்வேதம் மூலம் முதுமையை கையாளுதல்

“முதுமை என்பது நமது சிந்தனையின் முதிர்ச்சியையே குறிக்க வேண்டுமே தவிர கடந்து வந்த வருடங்களை அல்ல. எனவே மனதாலும் உடலாலும் என்றென்றும் இளமையாக வாழ பழக வேண்டும். உள்ளத்தில் இளமை இருந்தால் வாழ்க்கை அழகாகும் மற்றும் மன அமைதியும் கிட்டும். சருமத்தை இளமையாக வைத்து கொள்வது மட்டுமன்றி மனதையும் அமைதியாகவும் நற்சிந்தனைகளுடனும் வைத்திருத்தல் அவசியம். அப்போது தான் உள்ளத்தின் அழகு முகத்தில் தெரியும்.” என்கிறார் ஆயுர்வேத நிபுணர் லீவர் ஆயுஷ், டாக்டர் மஹேஷ்*.

இதனை நன்றாக உணர்ந்தால், இன்றைய டென்ஷனான வாழ்க்கை சூழலில் இளமையாக இருப்பதும் காட்சியளிப்பதும் எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கே புரியும்.
எனினும் ஏராளமான ஆயுர்வேத முறைகளை பின்பற்றி முதுமையை தள்ளிப்போடுவது எளிது,”

காலம் காலமாக ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் அதன் குணங்கள் சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சரும ஆரோக்கியத்தை ஆயுர்வேதம் எப்படி பார்க்கிறது?

வெளிறிப்போன முகம் என்பது அனீமியாவின் அல்லது குறைந்த ஹீமோகுளோபின்யின் முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. இந்த பிரச்சினையை அதன் வேரிலிருந்து குணப்படுத்த வேண்டுமே தவிர கிரீம்களால் அல்ல. பாண்டு என்பது சருமம் வெளிறி போதல் அல்லது நிறமின்றி போதல் என்பதாகும் இதன் காரணம் பித்தமானது மற்ற மூன்று தோஷங்களை விட மேலோங்கி இருப்பதால் என்று ஆயுர்வேதம் விளக்கமளிக்கிறது

அனீமியா அல்லது பாண்டு ஏற்படுவதன் காரணம் முகம் உட்பட உடல் பாகங்களுக்கு போதிய ஊட்டச்சத்து செல்லாததாகும். இதனால் வேறு பல அறிகுறிகளான இழுப்புத்தன்மை குறைதல், சருமம் வறண்டு போதல் போன்ற இதர அறிகுறிகள் ஏற்படலாம்.

பாண்டு ஏற்படுவதற்கான பல காரணங்களில், முறையற்ற மற்றும் ஆரோக்கியமில்லாத டயட்டை முக்கிய காரணியாக ஆயுர்வேதம் கருதுகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு அனீமியா தோன்றுகிறது. அதற்கான மிக சிறந்த ஆயுர்வேத சிகிச்சை ரசாயனா ஆகும். இதன் மூலம் அனீமியா குணமடைவதுடன் உடலையும் அது ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் ஆக்குகிறது. இந்த சிகிச்சையில், பஞ்சகர்மா (உடலை சுத்தம் செய்யும் 5 சிகிச்சை ஆயுர்வேத முறைகள்) மற்றும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்த சிகிச்சை முறைகளின் மூலம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி மருந்துகள் உடலில் முறையாக உறிஞ்சப்பட்டு வளர்சிதை சீராகி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

சருமத்துக்கு இதமான ஆயுர்வேத கலவையை தயாரித்தல்

சருமத்துக்கு இதமான ஆயுர்வேத கலவையான மஞ்சள், சீரகம், வெந்தயம் மற்றும் கருப்பு மிளகு கலவையை முகத்துக்கு தடவுவதன் மூலம் முகத்தில் முதிர்ச்சி தெரியாமல் பாதுகாக்கலாம். இந்த கலவை முகத்துக்கு வசீகரம் கூட்டுவதில் பிரசித்தி பெற்றதாகும்:

லைஃப் ஸ்டைலில் மாற்றம் செய்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை முன்னேற்றி சருமம் முதிர்ச்சியடையாமல் காக்கலாம்

வாத சரும வகை கொண்டவர்களுக்கு வறண்ட சருமம் இருக்கும். எனவே அவர்கள் தங்களது டயட்டில் கொழுப்பினை சேர்த்து கொள்ளலாம். கப சரும வகையை சேர்ந்தவர்களுக்கு எண்ணெய் பசையான சருமம் இருக்கும் எனவே அவர்கள் அதிக கொழுப்பில்லாத உணவினை எடுத்து கொள்ளலாம். கொழுப்பை முழுமையாக தவிர்த்தல் நன்மை பயக்காது. சுத்தமான தண்ணீரை போதிய அளவு குடிப்பது சருமத்துக்கு நல்லது. வெளிப்புறமாக சருமத்துக்கு ஈரப்பதத்தினை அளிக்க குளிப்பதற்கு முன் மசாஜ் செய்யலாம். புனித தாமரை, சந்தனம் மற்றும் அஷ்வகந்தா அடங்கிய எண்ணெயை அதற்கு பயன்படுத்தலாம். அதன் மூலம் சருமம் இளமையாகவும் பளபளப்புடனும் காணப்படும்.

எப்போதும் கவலையுடன் காணப்பட்டால் அது சருமத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்களாக வெளிப்படும். யோகா செய்து மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யலாம். தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேர உறக்கம் அவசியம். மனதை ரிலாக்ஸ் செய்யும் அரோமாதெரபி ஆழந்த உறக்கத்தை தூண்ட உதவும்.

இளமையான சருமத்துக்கு ஆயுர்வேத ராயல் மில்க் குளியல்

நமது பண்டைய கால அரசிகள் எவ்வாறு தங்களது சருமத்தை இளமையாக வைத்திருந்தார்கள் தெரியுமா? தினசரி அவர்கள் எடுத்துக்கொண்ட குளியல் நடைமுறைகளே அதற்கு காரணம். அரச வைத்தியர்கள் பாலில் குளிப்பதை அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். நீங்களும் அது போன்ற குளியலை வீட்டில் செய்யலாம். 70 விழுக்காடு கரகரப்பாக பொடி செய்த ஓட்ஸ் (கிட்டத்தட்ட 10 விழுக்காடு) சரசபரில்லா, மார்ஷ்மெலோ வேர் மற்றும் ரோஜா இதழ்கள் ஆகிய பொருட்களை ஒரு மெல்லிய மஸ்லின் துணியில் மூட்டையாக கட்டிவிடவும். இந்த மூட்டையை வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து குளிக்கும்போது உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்கவும். இதன் மூலம் உங்களது உடல் போதிய நீர்ச்சத்தினை பெறும்.

ஆயுர்வேதத்தை பொருத்த வரை முதுமையை தள்ளிப்போடும் மூலிகைகள்

முதுமையை தள்ளிப்போடும் அம்சம் கொண்ட பொருட்களை தேடுகையில், அதில் உங்களது சருமத்துக்கு பொலிவையும் வசீகரத்தையும் வழங்கும் திறன் கொண்ட கீழ்கண்ட மூலிகைகள் உள்ளனவா என்று பார்க்கவும்.

ஒரு ஆயுர்வேத ஸ்கின் கிரீம் மேலே கூறப்பட்ட அனைத்து மூலிகைகளும் அடங்கியது மற்றும் பொலிவான, இளமை துள்ளும் சருமத்தை தரக் கூடியது.

*டாக்டர். மஹேஷ் அலிகரில் உள்ள ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் த்ரவ்யகுணா பிரிவின் விரிவுரையாளரும் எச்ஓடி யும் ஆவார்.

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

1 hour ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

1 hour ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

3 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

3 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

3 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

3 hours ago