வாய் துர்நாற்றம் போக்க எளிமையான இயற்கை வழிகள்

‘ஹலிடோசிஸ்’ எனப்படும் வாய் துர்நாற்றம், ஒரு நோய் இல்லையே ஒழிய பொது வாழ்வில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். வாய் துர்நாற்றம் என்பது ஒரு தற்காலிகமான அறிகுறி தான். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றினால் அது தானாகவே சரியாகி விடும். ஆனால் சில நேரங்களில் அது உள்ளே காணப்படும் சில பிரச்சினைகளை பற்றி நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அது இருக்க கூடும். வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகளை நாட நீங்கள் எண்ணுவீர்களானால், ஆயுர்வேதத்தில் அதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றின் மூலம் நீங்கள் வாய் துர்நாற்றத்தை சரி செய்யலாம். முதலில் நாம் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான சில காரணங்களை அறிவோம்.

வாய் துர்நாற்றத்துக்கான காரணங்கள்

கீழ்கண்ட காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படக் கூடும்

வாய் துர்நாற்ற ம் நீங்க ஆயுர்வேதத் தீர்வுகள்

ஆயுர்வேதத்தை பொருத்த வரையில், மோசமான வாய் ஆரோக்கியம் மற்றும் மோசமான செரிமான சக்தி ஆகிய இரண்டும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களாகும்.
இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஏனென்றால் மோசமான ஜீரண சக்தியினால் பேக்டீரியாக்கள் உடலிலும் வாயிலும் பெருகிவிடும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படக் கூடும். சில மூலிகைகளையும் சில எளிமையான வீட்டு குறிப்புகளையும் பின்பற்றி அதன் மூலம் பிரச்சினையை மேலோட்டமாக மூடி மறைக்காமல் வேரிலிந்து சரி செய்து கொள்ள ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

1. புதினா இலைகள்

வாய் துர்நாற்றம் நீங்க அருமையான மூலிகை புதினா. புத்துணர்ச்சியான சில புதினா இலைகளை மென்று தின்று பாருங்கள். புதினா உங்களது வாயில் உள்ள பேக்டீரியாவை அழிக்கிறது. அதன் இலைகளில் உள்ள பச்சையம் இயற்கையான மவுத் ஃப்ரெஷனராக வேலை செய்யும். இலைகளை மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் அளிக்கும் பேக்டீரியா நீங்கி விடும். மற்றும் புதினாவின் நறுமணம் வாய்க்கு புத்துணர்ச்சியளிக்கும்.

2. கிராம்பு

கிராம்பில் பேக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளதால் அது வாயில் உள்ள பேக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. அது உங்களது மூச்சுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. வாயில் சிறிது கிரம்பினை போட்டு நன்றாக மெல்ல வேண்டும். அதன் வலுவான சுவை உங்களுக்கு பிடிக்காவிட்டால் கிராம்பு டீ அல்லது கிராம்பின் நற்குணம் கொண்ட டூத் பேஸ்டுகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

3. டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும் பேக்டீரியாக்களை நீக்குவதில் பிரசித்தி பெற்றது. டீ ட்ரீ ஆயிலின் நற்குணமானது கிருமிகளை கொல்வதில் சிறப்புடன் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன. இந்த எண்ணெயை சில சொட்டுக்கள் நீரில் ஊற்றி வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் வாயை சுத்தமாகவும் வைக்கும்.

4. சோம்பு

ஆன்டி பேக்டீரியல் குணங்கள் கொண்ட சோம்பு வாய் துர்நாற்றத்தை எதிர்க்க பயன்படும். அதனை வெறுமனே மென்றும் தின்னலாம் அல்லது உங்களது டீயிலும் கலந்து பருகலாம். அப்படி மென்று தின்னும் போது வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும் பேக்டீரியாக்களும் அழிந்து விடும்.

5. த்ரிபலா

“த்ரிபலா ஆயுர்வேதம் மூலம் நமக்கு கிடைத்துள்ள அரிய முத்தாகும். அது வாய் துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாது செரிமான உறுப்புகளை சரி செய்து கழிவுகளை நீக்குகிறது,” என்கிறார் லீவர் ஆயுஷின் ஆயுர்வேத நிபுணர் டாக்டர். மஹேஷ் டி.எஸ்.

டாக்டர். மஹேஷ் டி.எஸ் போன்ற ஆயுர்வேத நிபுணர்கள் த்ரிபலாவையே பரிந்துரைக்கின்றனர். செரிமானத்துக்கு உதவும் த்ரிபலா மூலிகை ஜீரண சக்தியை அதிகரித்து கெட்ட கழிவுகளை போதிய இடைவெளியில் முற்றிலும் வெளியேற்றுகிறது. முறையான செரிமானமும் வாய் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். த்ரிபலா, ஆயுர்வேத கடைகளில் கேம்ஸ்யூல் மற்றும் டானிக் வடிவில் கிடைக்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

*டாக்டர். மஹேஷ் அலிகரில் உள்ள ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் த்ரவ்யகுணா பிரிவின் விரிவுரையாளரும் எச்ஓடி யும் ஆவார்.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago