வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைப்பதற்கான ஆயுர்வேத டிப்ஸ்

மாறும் சீதோஷ்ண நிலைக்கேற்ப உங்களது தலைமுடியின் தன்மையும் மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா?

உதாரணமாக, மழைக்காலத்தில் உங்களது கூந்தல் மொறமொறப்பாகவும் வெயில் காத்தில் பிசுபிசுப்பாகவும் இருக்கும். வெயிலாகவும் காற்றில் ஈரப்பதம் நிறைந்தும் இருக்கும் காலங்களில் தலைக்கு எண்ணெய் வைத்தால் அது கூந்தலை மேலும் பிசுபிசுப்பாகவும் தொட்டால் ஒட்டும் அளவுக்கு ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிடும்!

ஆனால் அதற்காக நாம் வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைக்காமல் இருக்க வேண்டுமா?

லீவர் ஆயுஷின் ஆயுர்வேத வல்லுனர் *டாக்டர். மஹேஷ் டி எஸ் கூறுகிறார், “அழகான கூந்தலை ஒருவர் பெற வேண்டுமென்றால் கூந்தலுக்கு ரெகுலராக எண்ணெய் வைக்க வேண்டும் கூடவே சத்துணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். வலுவான பளபளப்பான கூந்தல், ஒருவரின் உடல் போஷாக்காகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை குறிக்கும் ” பழமையான ஆயுர்வேத அறிவியலின்படி , இயற்கையான பொருட்கள் அடங்கிய தைலங்களை கொண்டு கூந்தலுக்கு தொடர்ச்சியாக எண்ணெய் வைப்பதே உங்களது கூந்தலின் தரத்தை உயர்த்துவதற்கான ஒரே வழி . அத்தகைய கூந்தல் தைலங்கள் முடியை வேரிலிருந்து உறுதியாக்கி பளபளப்பாக்குகின்றன !

அப்யங்கா பற்றி தினாசர்யா (தினசரி பழக்க வழக்கங்கள்) என்ற அத்தியாயத்தில் சிரசில் (தலை), ஷ்ரவணா (காதுகள்) மற்றும் பாதா (கால்கள் குறிப்பாக பாதங்கள்) ஆகிய இடங்களில் செய்யப்படும் அப்யங்கா (ஏண்ணெய் மசாஜ்) மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஏனெனில் இது உடலின் எல்லா பாகங்களுக்கும் தூண்டுதலாகவும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நமக்கு உதவுகிறது.

எனவே, வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத டிப்ஸ்களை இப்போது நாம் காண்போம். இதன் மூலம் உங்கள் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் அது வழங்குகிறது.

டிப் #1: கூந்தலுக்கு அதிகமாக எண்ணெய் வைக்க வேண்டாம்

கூந்தலுக்கு குறைவான அளவு எண்ணெய் பூசுவதால் வெயில் காலத்தில் சூரியனின் கடுமையான அல்ட்ரா-வயலெட் கதிர்களிடமிருந்து கூந்தலை காக்கலாம். எனவே, வெயில் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதை முழுவதும் தவிர்க்க வேண்டாம். சிறிது பூசிக் கொள்ளலாம்.

டிப் #2: கூந்தலில் எண்ணெய் வைத்து இரவு முழுக்க ஊற விட வேண்டாம்

தலைக்கு எண்ணெய் தேய்த்து இரவு முழுவதும் அதனை ஊறவிடுவதால் ஷாம்பூ தேய்த்தாலும் கூட உங்களது தலை சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இதனை நீக்க அதிகளவு ஷாம்பூ பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் கூந்தல் வேர்களில் கெமிக்கல்கள் படியக்கூடும். அதற்கு பதிலாக கூந்தலில் சிறிது தைலம் தடவி இரண்டு மணி நேரங்களுக்குள் தலைக்கு குளித்துவிடவும். தினச்சர்யா (தினசரி பழக்க வழக்கம்) அத்தியாயத்தில் ஒருவர் எந்த காலத்திலும் அப்யங்கா (எண்ணெய் மசாஜ்) அல்லது எண்ணெய் பூசாமல் தலைக்கு குளிக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.. எனினும் ஆயுர்வேதத்தில் கூந்தலில் எண்ணெய் வைத்து இரவு முழுக்க ஊற விடுவது பற்றி சிறப்பாக கூறப்படவில்லை.

டிப் #3: இயற்கை பொருட்கள் நிறைந்த ஷாம்பூவை பயன்படுத்தவும்

ஆயுர்வேத ஷாம்பூவான லீவர் ஆயுஷ் ஃபெனுக்ரீக் ஆன்டி-டேமேஜ் ஷாம்பூவை பயன்படுத்துவதால், கூந்தல் பாதிப்படையாமல் இருக்கும். மேலும் இதனை அடிக்கடி பயன்ப்படுத்தலாம் ஏனெனில் இதில் கூந்தலுக்கு போஷாக்களிக்கும் இயற்கை பொருட்கள் நிறைந்துள்ளன.

டிப் #4: ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பூ பயன்படுத்தவும்

மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணெயை கூந்தலில் பூசுவது அவசியமாகும். இதனால் தலையில் பூஞ்சை வளர்ச்சி தவிர்க்கப்பட்டு தலை சருமம் ஆரோக்கியமாகிறது. ஆனால் சரியான முறையில் பூசுவதும் பின்னர் வாஷ் செய்வதும் அவசியமாகும். மேலும் அது மயிற்கால்களுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்பி தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மயிற்கால்களுக்குள் ஊடுறுவாமல் காக்கிறது. அதிக சக்தியுடைய ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பூக்களை பயன்படுத்துவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும் அது தடுக்கிறது. ஆன்டி-டான்ட்ரஃப் ஆயுர்வேதிக் ஷாம்பூவான, லீவர் ஆயுஷ் ஆன்டி-டான்ட்ரஃப் நீம் ஷாம்பூ பயன்படுத்தினால், இப்பிரச்சினை உடனடியாக குறையும் என டாக்டர் மஹேஷ் டி எஸ் உறுதிபட கூறுகிறார்.

இக்கட்டுரையை பகிர்வீர்!

நாளுக்கு நாள் வெயில் ஏறிக்கொண்டே செல்கிறது. எனவே உங்களது நண்பர்களுக்கும் இந்த கட்டுரையை ஷேர் செய்யுங்கள். அவர்களும் தங்களது கூந்தலை பாதுகாத்து கொள்ளட்டுமே!

*டாக்டர். மஹேஷ் அலிகரில் உள்ள ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் த்ரவ்யகுணா பிரிவின் விரிவுரையாளரும் எச்ஓடி யும் ஆவார்.

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

2 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

2 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

2 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

2 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

2 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

2 hours ago