அனைத்து தாய்மார்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு இல்லத்தரசியின் எடைக் குறைப்பு திட்டம்!

பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் பருமனை, 10 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைக்க முடியாதது ஏன் என என்றேனும் நீங்கள் நினைத்தது உண்டா?

ஓரிடத்தில் நிற்காமல் பரபரவென நீங்கள் ஓடியாடி வேலை செய்யலாம், வீட்டில் எல்லோரையும் கவனித்துக் கொள்ளலாம், இருந்தபோதிலும் உங்களின் இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்புச் சதை குறையவே குறையாது. அநேகமாக, உங்களின் சீரற்ற உணவுப்பழக்கத்திற்கு, ஒரு இடைவெளி விட இது தகுந்த நேரமாக இருக்கலாம். ஒரு பிசியான இல்லத்தரசிக்கு, எந்த பாதிப்பும் இன்றி, அவரது பிசியான வேலைநேரத்தை இடையூறு செய்யாமல், அதேசமயம், அவரது உடல் பருமனை குறைக்க, தனித்துவமான எடைக் குறைப்பு திட்டம் தேவை.

இல்லத்தரசி எனும் கயிற்றுமேல் நடக்கும் பொறுப்புக்கு இடையே, பழைய உடல் தோற்றத்தை மீட்டெடுக்க நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

1. சரியான காலை உணவு சாப்பிட வேண்டும்

ஒரு நாளின் முக்கிய உணவு என்று காலை உணவைச் சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. அன்றைய நாளின் வேலைகளை செய்யத் தேவையான ஆற்றலை காலை உணவு உங்களுக்கு தருவதோடு, நாள் முழுக்க கலோரிகளை எரிக்கத் தேவையான அவகாசமும் கொடுக்கிறது. அதேசமயம், மதிய நேரத்தில் உங்களுக்கு பசி எடுக்காவிட்டாலும், ஏதேனும் ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் போதும். ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான இட்லி, தோசை அல்லது தானியச்சத்து நிறைந்த ரவை/கோதுமை உப்புமா, அவல் உப்புமா போன்றவற்றையே காலை நேரத்தில் சாப்பிட வேண்டும். காலத்தை கடந்து நிற்கும் இத்தகைய இந்திய உணவு வகைகள், உடலில் கொழுப்பு சேராமல், போதுமான ஆற்றல் தர வல்லவை.

2. சாப்பாட்டை புறக்கணிக்கக்கூடாது

ஒரு வேளை நன்கு சாப்பிட்டுவிட்டதால், அடுத்த வேளை சாப்பாடு தேவையில்லை என்று புறக்கணிப்பது சரியல்ல. ஏனெனில், திடீரென பசி ஏற்பட்டு, கலோரி நிறைந்த உணவை சாப்பிடும் நிலை ஏற்படும். மேலும், வழக்கமாகச் சாப்பிடுவதை விட, அதிக அளவு சாப்பிட நேரிடும். சீரான இடைவெளியில், 3 வேளையும் சாப்பிடுவதால், உடலின் வளர்சிதை மாற்றம் சீராகி, எடை குறைய உதவும். ஆயுர்வேத வழியில் வாழ்க்கையை வாழலாம் – ஒரு ஆரோக்கியமான உடலுக்கு, ஃபிரெஷ்ஷான மூலப்பொருட்கள் சேர்த்து எளிதாகச் சமைத்த உணவு வகைகள் மற்றும் ஒரு கோப்பை மோர் போதுமானது.

3. நிறைய நடக்கலாம்

லிஃப்டிற்கு பதிலாக, படிக்கட்டுகளை பயன்படுத்த மறந்துவிடாதீர். ஷாப்பிங் போனால், வாகனத்தை ஒரு குறிப்பிட்ட தொலைவில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து, கடைக்குள் போகலாம். ஒரு நீண்ட நாள் முடிந்ததும், மாலை நேரத்தில், வீட்டின் அருகே உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வது ரிலாக்ஸ் தருவதோடு, தொப்பை விழாமல் தடுக்கவும் உதவும்.

4. சோம்பல் பழக்கத்திற்கு இடம் தரக்கூடாது

உங்களின் கைக்குழந்தை பிற்பகலில் துயில் கொள்வதால், நீங்களும் கூட படுத்து உறங்கக்கூடாது. அந்த நேரத்தை தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இதேபோல, ஓரிடத்தில் அமர்ந்து உங்களின் தோழியுடன் ஃபோன் பேசாமல், நடந்துகொண்டே ஃபோனில் பேசுவது நல்லது. டிவி பார்த்தபடியே சாப்பிடுவதை புறக்கணியுங்கள். அப்படிச் செய்தால், உங்களுக்கே தெரியாமல், கூடுதல் நொறுக்குத்தீனிகளை சாப்பிட நேரிடும்.

5. போதிய உறக்கம் தேவை

உங்களின் குழந்தைகள் தூங்குவதைப் போல, நீங்களும் சராசரியாக 8 மணிநேரம் தூங்க வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான், உங்களின் மன அழுத்தம் குறைவாக இருக்கும், சோர்வின்றி வேலை செய்யலாம், ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இரவில் போதிய அளவு தூங்காதவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

வாழ்க்கை முறையில் ஏற்படும் சிறு மாற்றம், ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். படுக்கைக்கு அடியில் நீங்கள் நீண்ட காலமாக வைத்திருக்கும் எடை பார்க்கும் கருவியில் இந்த திருப்பம் எதிரொலிக்கும். தினந்தோறும் உடலுக்கு வேலை தருவது வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தும். அதனால், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, தரையை துடைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால், உங்களின் உடல் எடை குறையும். அப்புறம், இன்னும் எதற்காகக் காத்திருக்கீங்க?

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

13 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

13 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

13 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

13 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

13 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

13 hours ago