தோல்நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பீர்க்கங்காய்!!!

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

1. முற்றிய பீர்க்கங்காயை மட்டும் சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.
2. சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும்.
3. பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
4. சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.
5. பீர்க்கங்காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.
6.இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.
7. கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கங்காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி.

 

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

10 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

10 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

10 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

10 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

10 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

10 hours ago