ஏன் அனைத்து உழைக்கும் தாய்மார்களுக்கும் தினசரி ஸ்பா டைம் தேவை?

நீங்கள் பாதி இரவு விழித்திருந்து அடுத்த நாளுக்கான அலுவலக ப்ரெசெண்டேஷனை செய்யும் போதுகூட உங்கள் குடும்பத்துக்காக சூடாக இட்லி சமைக்க நேரம் ஒதுக்குகிறீர்கள். குழந்தைகளின் வீட்டுப்பாட வேலைகள் உங்கள் ஓய்வு நேரத்தையும் விழுங்கிவிடுகின்றன. மேலும் உங்கள் அபிமான சீரியல் பார்க்கவோ, உங்கள் கணவருடன் பேசவோ உங்களுக்கு சொற்ப நேரமே மிஞ்சுகிறது.

கேள்விப்பட்ட கதைபோலவே இருக்கிறதா? அனேகமாக ஓடியாடி வேலைபார்க்கும் அனைத்து இந்திய தாய்மார்களின் கதை இதுதான். எட்டு கைகள் கொண்ட கடவுள்போல் பலவேலைகளை அவர் தினமும் செய்கிறார். ஆனால் கடவுளாகவே இருந்தாலும் அவரது விசேஷ சக்தி தீர்ந்துவிடாமல் உழைத்திட கொஞ்சம் ஆசுவாசம் தேவை. ஒரு ஸ்பாவுக்கு சென்றிட நம் அனைவருக்கும் வசதி வாய்ப்பதில்லை, ஆனால் சில பயிற்சிகள் மூலம் அந்த தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம் ,காலை மாலை எதுவாக இருப்பினும்.

அமைதியுடன் தொடங்குங்கள்

காலையில் சிறிதுநேர தியானம் அந்த நாளுக்காக சிறப்பாக உங்களை தயார் படுத்த வழிவகுக்கும். சில ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள், சிறிது நேர யோகா, உங்கள் மூச்சை ஆழ்ந்து கவனிக்கும் சில அமைதியான நேரங்கள் என அனைத்தும் இறுக்கத்தை நீக்கி பலன் தரும்.

இதேபோன்ற பழைய பயிற்சிமுறைகள் அமரும் முறையினால் வரும் வலிகள் நீங்கி, தோலுக்கும் கூந்தலுக்கும் ஒருவித பொலிவு தந்து, சுருக்கங்கள் விழுவதையும் தள்ளிப்போடுகின்றன. இது நீங்கள் உங்கள் குடும்பத்துடனும் உடன் பணிபுரிபவர்களுடன் உறவாடுகையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த வல்லது.

மற்றொருநாள் ஒரு 90-நொடி முக மசாஜ் முயன்றுபாருங்கள்.உங்கள் விரல்களை சுழல் வட்டமாக அழுத்தி, உங்கள் கண்கள், நெற்றி மற்றும் கன்னப்பகுதிகளில் மசாஜ் செய்வதால் மன அழுத்தம் குறைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. புத்துணர்வூட்டும் இந்த பயிற்சியை வேப்ப எண்ணை போன்ற இயற்கையான எண்ணெய் மூலம் செய்கையில் உள்ளும் புறமாக உடல் தூய்மையடைகிறது.

கவனமாக இருங்கள்

ஒரு நீண்ட கடினமாக பயணத்துக்குப் பின்னர் உடனே நீங்கள் வேலைக்கு ஓடவேண்டியிருக்கும். ஆனால் அவ்வப்போது ஓய்வெடுக்க மறந்துவிடாதீர்கள். இயற்கை துளசி, வேப்பிலை, கற்றாழை எல்லாம் கொண்ட ஃபேஸ்வாஷ் பயன்படுத்தி புத்துணர்வூட்டுங்கள். மஞ்சளும் பாலின் நற்குணங்களும் நிரம்பிய ஒரு மாய்ஸ்ச்சுரைசரை எப்பொழுதும் வைத்திருங்கள். குளிரூட்டப்பட்ட பணியிடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் கைகளை ஈரப்பதத்துடன் வைக்க அது உங்களுக்கு உதவும்.

இறுக்கம் தளருங்கள்

ஒரு வெதுவெதுப்பான குளியல் மூலம் உங்கள் கவலைகளை புறந்தள்ளுங்கள். மணம் வீசும் சில எண்ணெய் திரவியங்களை குளிக்கும் நீரில் கலந்து வீட்டிலேயே ஸ்பா அனுபவம் பெறுங்கள். பிடித்தமான பாடலை ஒலிக்கவிட்டு உங்களை மகிழ்வுறச் செய்யுங்கள். வாரம் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட குளியல் உப்புகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து அசதியடைந்த உங்கள் பாதங்களை அதில் மூழ்கச்செய்யுங்கள்.

உங்களுக்கென நேரம் ஒதுக்குங்கள்

உங்கள் விடுமுறை நாளை ஒரு மசாஜுக்கோ பாத மசாஜுக்கோ செலவிட்டு உங்களை மகிழ்வித்துக்கொள்ளுங்கள்.

ஒரு “ஓய்வு இடம்” என்று உங்கள் படுக்கையறையில் உருவாக்கிக்கொள்ளுங்கள்.உங்கள் யோகா மேட், முக்கிய திரவியங்களை அங்கே வைத்துக்கொள்ளுங்கள். வாசனை நிரம்பிய மெழுகுவர்த்திகள் அங்கே வைத்து உங்களுக்கான பிரத்யேக மகிழ்வறையை உருவாக்குங்கள். உள்ளங்கைகள், கட்டைவிரல் அடிப்பகுதிகளில் உள்ள எளிமையான அக்குப்ரஷர் புள்ளிகளில் மென்மையான மசாஜ் கொடுத்து இறுக்கத்தை தளர்த்திக்கொள்ளுங்கள்.

ஒரு பணி செய்யும் தாயாய் இருப்பது சிரமமே.ஆனால் உங்களுடைய பிரத்யேக தேவைகளையும் குடும்பத் தேவைகளுடன் சேர்த்து ஒருசேர கவனித்தால் எளிமையாக உங்களை நீங்களே மகிழ்வித்துக்கொள்ளலாம். அடுத்தநாளை புத்துணர்வுடன் துவக்கலாம். உங்கள் உள்ளிருக்கும் தேவதையை கவனிக்க மறக்காதீர்கள்.!

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago