புதிய நகரத்துக்கு இடம் பெயர்ந்துள்ளீர்களா? பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள உங்களது சருமத்துக்கு உதவும் பராமரிப்பு வழிகளை பின்பற்றுங்கள்

புதிய நகரின் சூழல் முதலில் சருமத்தில் தான் பாதிப்பினை ஏற்படுத்தும். முகத்தில் பருக்கள், தலை முடி பொலிவின்றி காணப்படுதல், முட்டி மற்றும் பாதங்களில் வெடிப்புகள் ஆகியவை ஏற்படக்கூடும். புது இடத்துக்கு மாறும்போது மாசு, அழுத்தம் மற்றும் மாறும் டயட் ஆகியவற்றிலிருந்து யாரும் தப்பிப்பது கடினம் தான். புதிய சீதோஷ்ண நிலைக்கு உங்களது சருமத்தை எளிதில் பழக்கப்படுத்த உதவும் குறிப்புகளை இப்போது நாம் காண்போம்.

1. சூழலுக்கேற்ப மாறுங்கள

தண்ணீர்- தண்ணீரின் தன்மை ஒவ்வொரு நகரத்துக்கு மாறுபடும். நீங்கள் கடுமையான நீருக்கு பழகியிருந்தால் நகரில் காணப்படும் மென்மையான தண்ணீருக்கு பழகுவது கடினமாக இருக்கும் குறிப்பாக அப்படிப்பட்ட நீரில் குளிப்பது மற்றும் முகம் கழுவுவது. சருமத்தின் pH பேலன்ஸ் நீரின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
கிளென்சிங்குக்கு பிறகு ஆல்கஹால் இல்லாத டோனரை பயன்படுத்த மறக்காதீர்கள்.

வெப்பநிலை – சூடான வெப்ப நிலைக்கு மாறும்போது சருமத்தில் எரிச்சல் மற்றும் சிவந்து போகும் நிலை ஏற்படலாம். மஞ்சள், பன்னீர், கேமோமீல் மற்றும் சந்தனம் அல்லது வெள்ளரி பேஸ்ட் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி மாஸ்க் தயாரித்து சருமத்தில் பூசி வரலாம்.

ஈரப்பதம்- காற்றில் உள்ள ஈரப்பதத்துக்கு ஏற்ப சருமத்தை ஹைட்ரேட் செய்வது அவசியம். காற்றில் குறைந்த ஈரப்பதம் உடைய இடத்துக்கு குடி போகிறீர்கள் என்றால் திக்கான மாயிஸ்சரைசரை முகத்துக்கும், பாதங்கள் மற்றும் முட்டிகளில் திக்கான கிரீம்களையும் பயன்படுத்துங்கள். காற்றில் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களுக்கு மிதமான மாயிஸ்சரைசர்கள் போதுமானதாக இருக்கும்.

2. சரியாக உண்ணுங்கள்

உங்களுக்கு அதிகம் பழக்கமற்ற உணவுகளை சாப்பிட வேண்டிய நிலை புதிய நகரில் ஏற்படலாம். இதனால் உங்களது செரிமான உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக சருமமும் பாதிப்புக்கு உள்ளாகும். உள்ளூர் மற்றும் சீசனல் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலுக்கு உங்களது உடலை பழக்கிக் கொள்ளலாம். போதிய அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அருந்துவதன் மூலம் உங்களது சருமத்தை ஈரப்பதத்துடனும் மினுமினுப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். உங்களது சமையலறையை செட் செய்து கொண்டு வீட்டிலேயே சமைக்க பழகுங்கள் மற்றும் இயற்கை நிவாரணிகளான மஞ்சள், இஞ்சி மற்றும் லெமன் கிராஸ் ஆகியவற்றை பயன்படுத்த மறக்காதீர்கள்.

3. மன அழுத்தத்தை விரட்டுங்கள்

புதிய இடத்துக்கு மாறுவதனால் பதட்டம் ஏற்படுவது இயற்கை தான். பேக்கிங் மற்றும் புதிய இடத்தில் அன்பேக் செய்தல் போன்றவை சருமத்தில் எக்சிமா மற்றும் சோரியாசிஸ் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். புதிய இடத்தில் நீங்கள் உங்களை ஒன்ற செய்யும் முயற்சிகள் சில நேரத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சருமத்தின் கார்டிசோல் அளவு அதிகரித்து எண்ணெய் பசையை சருமத்தில் அதிகரிக்கும். இதனால் பருக்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சாலிசிக் ஆசிட் கொண்ட கிளென்சிங் பொருட்களை பயன்படுத்தி இப்பிரச்சினையை சரி செய்யலாம். யோகா மற்றும் தியானம் செய்யும் வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தை விரட்டி முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம்.

4. மாசுக்கு எதிரான பாதுகாப்பு கேடயம்

பெரு நகரங்களுக்கு குடி பெயர்வதனால் காற்று மற்றும் நீர் மாசினை எதிர்த்து அதிகம் போராட வேண்டியிருக்கும். இது சருமத்தின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். மாசுபட்ட காற்று மற்றும் புகை, ஆக்சிஜனில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதனால் சருமத்தில் உள்ள கொலாஜென்னை பாதித்து பருக்கள் ஏற்படக் கூடும். இதனால் சருமம் பொலிவிழந்து காணப்படும். சரும பரப்பில் விட்டமின் சி யை பூசி பாருங்கள், அது சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து சருமத்தை மீட்கும். பயணம் செய்கையில் உங்களது தலை மற்றும் கூந்தலை மூடியபடி சென்றால் சரும பாதிப்பு நேரடியாக ஏற்படாமல் தடுக்கலாம்.

சுருக்கமாக சொல்வதானால், புதிய நகரத்துக்கு குடி பெயறும் மன அழுத்தத்தின் காரணத்தால் உங்கள் சரும ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். நிறைய தண்ணீர் அருந்துங்கள், நன்றாக உறங்குங்கள் மற்றும் தினசரி ஒரு முறையாவது சுத்தமான காற்றினை சுவாசிக்க பசுமை நிரம்பிய பூங்காக்களில் காலாற நடந்து விட்டு வாருங்கள். சீக்கிரமே உங்களது சருமம் முன்பு போல பளிச்சிடத் தொடங்கிவிடும்!

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago