திடீரென ஓய்வை அறிவித்த கம்பீர்; ரசிகர்கள் அதிர்ச்சி !!

திடீரென ஓய்வை அறிவித்த கம்பீர்; ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கவுதம் காம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இன்று திடீரென ஓய்வு பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் கம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.

இந்திய அணியில் இருந்து மட்டும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்த காம்பீர், ஐ.பி.எல் போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வந்தார், ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட காம்பீர், கடந்த வருடத்தில் டெல்லி அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாதியிலேயே விலகினார், அதன் பின் டெல்லி அணியில் இருந்தும் புறக்கணிப்பட்டு வெளியில் அமர்த்தப்பட்டார்.

கடந்த தொடரில் சொதப்பிய காம்பீர் அடுத்த ஐ.பி.எல் தொடரிலாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக காம்பீர் இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு முடிவை தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ள காம்பீர், கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கம்பீரின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share

Recent Posts

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? – சீதக்காதி படத்துக்கு சிக்கல்

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி…

4 hours ago

ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.?

ஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிகொண்டே இருக்கிறது ஆனால் இதைப்பற்றி…

4 hours ago

தல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.! அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும், இந்தநிலையில் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க…

4 hours ago

தல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.! வைரலாகும் புகைப்படம்

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி உள்ளார், சத்யஜோதி…

4 hours ago

தல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா ?

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும்…

4 hours ago

Thuppakki Munai Review: ஷார்ப்பான மெசேஜ் சொல்லும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’

Vikram-Hansika Starrer Thuppakki Munai Review in Tamil: பல மெசேஜ்களை ஒரே படத்தில் சொல்ல நினைத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும்…

4 hours ago