நீண்ட நாட்களுக்கு பிறகு எல்ஜி அறிமுகம் செய்யும் புதிய லேப்டாப் மாடல்கள்.!

எல்ஜி நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவர் மாதம் இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது, அந்த லேப்டாப் மாடல்கள் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது, இந்நிலையில் அந்நிறவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அது என்னவென்றால் விரைவில் நடைபெறும் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் 2-இன்-1 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எல்ஜி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுகம் செய்யு புதிய லேப்டாப்

மாடல்கள் தலை சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் எல்ஜி கிராம் லேப்டாப் மாடல்கள் 17-இன்ச் மற்றும் 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 14-இன்ச் லேப்டாப் மாடல் 360 டிகிரி கோணங்களை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.

இரண்டு லேப்டாப் மாடல்களும் இன்டெல் கோர் ஐ7-8565யு செயலி மற்றும் யுஎச்டி கிராபிக்ஸ் 620 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எல்ஜி நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி-ஏ போர்ட், மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,எச்டிஎம்ஐ போர்ட்,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.

விரைவில எல்ஜி அறிமுகப்படுத்தும் 17-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 19.5மணி நேரம் பேட்டரி ஆயுள் வசதியுடன் வெளிவரும், பின்பு 14-இன்ச் கிராம் லேப்டாப் மாடல் 21மணி நேரம் பேட்டரி ஆயுள் வசதியுடன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு லேப்டாப் மாடல்களும் விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இந்த இரண்டு லேப்டாப் மாடல்களிலும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ரூபாய்.1லட்சம் விலையில் இந்த லேப்டாப் மாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source: gizbot.com

Share

Recent Posts

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…

1 hour ago

பிரியாணி விற்றே சாதனை படைத்த கடை! அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா?

பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…

1 hour ago

இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?

புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…

1 hour ago

ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…

1 hour ago

இன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

திருமணத் தடையால் தவிக்கிறீர்களா? அதற்கு என்ன செய்யலாம்!

திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…

1 hour ago