ஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமையாக வைக்கும் இயற்கை முறைகள்…

வயது ஆக ஆக நமது சருமத்தின் தோற்றம் நிச்சயம் மாற தொடங்கும். ஆனால், பலருக்கு வயதாகாமலே இது போன்ற மாற்றங்கள் வர தொடங்கும். இந்த மாற்றத்தை இளம் வயதிலே சந்தித்திருக்கும் ஆண்களுக்கு பல இயற்கை முறைகள் உள்ளன.

நாம் இன்று பயன்படுத்தும் கண்ட கிரீம்கள் உண்மையில் நமது முகத்தை அழகு செய்வதில்லை. மாறாக அது போன்ற ஒரு பிம்பத்தை நமக்கு தருகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்களை எளிதாக போக்குவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

சுருக்கங்கள் முகத்திலும் தோளிலும் ஏற்படுவது இயல்பு தான்.
என்றாலும், பலருக்கு இது மிக மோசமான அனுபவத்தையே தருகிறது. ஏனென்றால் முகத்தில் சுருக்கங்கள் மிக குறைந்த வயதிலே வந்து விடுகிறது. இதற்கு பல காரணிகள் உள்ளன. ஊட்டசத்து குறைபாடு, சுற்றுசூழல் மாற்றம், வேதி பொருட்கள் பயன்பாடு போன்றவற்றை சொல்லலாம்.

ஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமையாக வைக்கும் இயற்கை முறைகள்… முட்டை வைத்தியம்

முட்டையின் வெள்ளை கருவின் மகிமை நம்மில் பலருக்கும் தெரியும். நமது முகம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் உதவுகிறது. முக சுருக்கங்களை போக்குவதற்கான வழி…வெள்ளை கரு 1யோகர்ட் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை 1 ஸ்பூன்

ஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமையாக வைக்கும் இயற்கை முறைகள்… செய்முறை :-

முதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் சர்க்கரை மற்றும் யோகர்ட் சேர்த்து மீண்டும் அடித்து கொள்ளவும். இந்த கூழ்மையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் எளிதில் இளமையான அழகை பெறலாம்.

ஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமையாக வைக்கும் இயற்கை முறைகள்… கற்றாழை போதுமே..!

முக சுருக்கங்களை உடனடியாக நீக்குவதற்கு ஒரு அருமையான குறிப்பு உள்ளது. அதற்கு தேவையானவை…கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் பழுத்த தக்காளி 1 பழுத்த வாழை பழம் பாதி

தக்காளி அரிந்து கொண்டு, அதன் விதையை நீக்கி கொள்ளவும். பிறகு கற்றாழை ஜெல், வாழைப்பழம், தக்காளி ஆகியவற்றை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவவும். 30 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தாலே முக சுருக்கங்கள் மறைந்து போகும்.

ஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமையாக வைக்கும் இயற்கை முறைகள்… சுருக்கங்களை எளிதில் போக்க

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கு பல வகையான பொருட்கள் வேண்டியதில்லை. மாறாக இந்த இரண்டு பொருட்களே போதும்.தேவையானவை :-தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா 1 ஸ்பூன்

முதலில் பேக்கிங் சோடாவில் இந்த தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கலந்து கொள்ளவும். பிறகு இந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்கி விடும்.

ஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமையாக வைக்கும் இயற்கை முறைகள்… வாழைப்பழ முறை

பல்வேறு நலன்களை கொண்ட இந்த வாழைப்பழத்தை நாம் முகத்தின் சுருக்கங்களை போக்குவதற்காகவும் பயன்படுத்தலாம். இதற்கு தேவையானவை…பழுத்த வாழைப்பழம் பாதி ஆலீவ் எண்ணெய் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன்

வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி இதமாக மசாஜ் தரவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து போகும்.

source: boldsky.com

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

9 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

9 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

9 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

9 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

9 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

9 hours ago