இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க… இல்லன்னா வழுக்கை விழுந்திடும்…

அலோபிசியா என்பது தலை முடி அளவுக்கு அதிகமாக கொட்டி வழுக்கை உண்டாகும் நிலையாகும். ஆண் பெண் ஆகிய இரு பாலருக்கும் இந்த நிலை உண்டாகலாம். ஆனால் இதற்கு வெவ்வேறு காரணங்கள் உண்டு. ஆகவே முடி உதிர்வை கட்டுப்படுத்தும் பல்வேறு வழிகள் பற்றி அறிந்து கொள்வதால் இந்த பாதிப்பை குறைக்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் 70 முதல் 100 முடிகளை இழக்க நேரலாம். இது சாதாரணமானது. ஆனால் 100 முடிக்கு மேல் ஒரு நாளில் உதிர நேரும் போது அது ஒரு அசாதாரண நிலையை எட்டுகிறது. இதனால் முடி வழுக்கை உண்டாகிறது. இந்த நிலை அலோபிசியா என்று அறியப்படுகிறது.

பொதுவாக அலோபிசியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தலையில் உள்ள முடியை இழக்கின்றனர். மேலும் இது மற்ற சில இடங்களையும் பாதிக்கிறது,

அவை, கண் புருவம்கண் இமைகள்தாடிஅக்குள் பகுதிபிறப்புறுப்பு பகுதி

இந்த பதிவில் நாம் அலோபிசியா குறித்து அதன் அறிகுறிகள் மற்றும் அதனைத் தடுக்கும் விதங்கள் பற்றி அறிந்து கொள்வோம். இயற்கையான முறையில் முடி உதிர்வைத் தடுத்து வழுக்கை விழாமல் இருக்கும் வழிகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க… இல்லன்னா வழுக்கை விழுந்திடும்… காரணங்கள்

அலோபிசியா என்னும் தலை முடி வழுக்கை உண்டாகக் காரணங்கள் நிறைய இருக்கின்றன. தலை முடி வழுக்கை உண்டாக சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாரம்பரியம்மோசமான உணவுப்பழக்கம்மன அழுத்தம்தைராய்டு சுரப்பு குறை தொற்று வியாதிகள்மருந்துகளின் செயல்பாடு (குறிப்பாக கீமோதெரபி , தைராய்டு எதிர்ப்பு மருந்து, இரத்த உறைவு எதிர்ப்பு மருந்து , கொலஸ்ட்ரால் மற்றும் வைட்டமின் சிகிச்சைக்கான மருந்து போன்றவை )இரும்பு சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை

இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க… இல்லன்னா வழுக்கை விழுந்திடும்… அலோபிசியா அறிகுறிகள்

ஆண்களுக்கு பொதுவாக முன் முடி வழுக்கை முதலில் ஏற்படுகிறது. ஆனால் பெண்களுக்கு வேறு விதமாக இருக்கும். சில வகை அலோபிசியாவில் அரிப்பு மற்றும் உச்சந்தலையில் வலி போன்றவை உண்டாகலாம்.

காலையில் படுக்கையை விட்டு எழும்போது தலையணையில் உங்கள் முடி கொட்டி இருந்தால், அது தலை முடி அதிகமாக உதிர்வதற்கான அடையாளம் ஆகும். நீங்கள் தலைக்கு குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் மிக அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டால் அது அலோபிசியாவின் அறிகுறியாக இருக்கலாம். தலை சீவும் போதும் அளவுக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்படலாம். அதிகமாக பொடுகு இருப்பது மற்றும்அதிக எண்ணெய்ப் பசையால் பிசுபிசுப்பு போன்றவை கூட முடி உதிர்விற்கு காரணமாக இருக்கலாம்.

இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க… இல்லன்னா வழுக்கை விழுந்திடும்… அலோபிசியாவை எப்படி தடுப்பது?

அலோபிசியா பாதிப்பு உண்டானவுடன் அதனை துரிதமாக கண்டறிவதும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான பழக்க வழக்கம் (புகை பிடிக்காமல் இருப்பது, போதுமான அளவு ஊட்டச்சத்து, அதிக சூரிய ஒளியை தவிர்ப்பது,) போன்றவை ஆரோக்கியமான தலை முடியைக் கொடுக்கும்.

அதிக அளவு தண்ணீர் பருகுவது. உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போல், தலை முடிக்கும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். இதனால் உங்கள் தலை முடி பளபளப்பாக, ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக தோன்றும். அதனால் தினமும் இரண்டு லிட்டர் அல்லது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் அலோபிசியாவை தடுக்க முடியும்.

இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க… இல்லன்னா வழுக்கை விழுந்திடும்… எவ்வாறு பாதிக்கிறது?

இந்த அலோபிசியா பாதிப்பால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் மற்றும் ஒப்பனை முறையில் பாதிப்பு உண்டாகலாம்.

ஒப்பனை தொடர்பான உலகளாவிய தொந்தரவுகளில் தலை முடி வழுக்கையும் ஒன்றாகும். இந்த பாதிப்பு ஒரு மனிதனை உணர்வு ரீதியாக பாதிக்கிறது. இதனால் இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான அணுகுமுறையில் பின்னடைவு உண்டாகிறது.

இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க… இல்லன்னா வழுக்கை விழுந்திடும்… ஆலோபிசியாவை போக்குவதற்கான இயற்கை சிகிச்சை

கேரட் ஜூஸ் மற்றும் தேங்காய் பால்

கேரட்டில் வைடமின் பி 6, பி 12, மற்றும் அன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் தலை முடி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் மாறுகிறது. தேங்காய் பாலில் வைட்டமின்கள் , அமினோ அமிலம், அருந்தனிமம், கனிமம் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் உங்கள் தலை முடி ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாற உதவுகின்றன.

தேவையான பொருட்கள்

2 கேரட்1 கப் தேங்காய் பால்(250மிலி )

செய்முறை

கேரட் மற்றும் தேங்காய் பாலை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இந்தக் கலவையை வடிகட்டாமல் உங்கள் தலை முடியில் தடவவும். அரை மணி நேரம் தலையில் ஊறியவுடன் குளிர்ந்த நீரால் தலையை அலசவும்.

இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க… இல்லன்னா வழுக்கை விழுந்திடும்… ஆப்பிள் சிடர் வினிகர்

தலையில் அதிகரித்த எண்ணெய் பசையால் உண்டாகும் முடி உதிர்வைத் தடுக்க வினிகர் ஒரு இயற்கை வழிமுறையாகும். இது தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

தேவையான பொருட்கள்

1 கப் ஆப்பிள் சிடர் வினிகர் (250மிலி)

செய்முறை

ஆப்பிள் சிடர் வினிகரை தலை முடியில் மற்றும் உச்சந்தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும்.

இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க… இல்லன்னா வழுக்கை விழுந்திடும்… முக்கிய குறிப்புகள்

அலோபிசியா பாதிப்பைத் தடுக்க சில எளிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

மன அழுத்தத்தைப் போக்கிடுங்கள். யோகா, சிரிப்பு சிகிச்சை, தாய் சி , உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகள் மூளையில் என்டோர்பின் உற்பத்தியை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

மனச்சோர்வு, பதட்டம், இரத்த சோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான சிகிச்சையை உடனடியாக எடுத்துக் கொள்ளவும்.

இரும்பு சத்து, அன்டி ஆக்சிடென்ட், கொழுப்பு அமிலங்கள், வைடமின் ஏ, பி, சி , ஈ போன்றவை அதிகம் உள்ள சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் உங்கள் தலை முடியின் வேர்கால்களும் அதிக வலிமையுடன் விளங்குகிறது.

மென்மையான பிரஷ் அல்லது சீப்பு பயன்படுத்தி தலைமுடியை சீவுங்கள். இறுக்கமான சிகை அலங்காரங்களை தேர்வு செய்வதைத் தவிர்க்கவும்.

புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். இந்த பழக்கத்தால் தலை முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகின்றன.

source: boldsky.com

Share

Recent Posts

TRAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்ளிகேஷன் இப்பொழுது உங்களுக்கு எளிதாகும்

சிறப்பு செய்திசமீபத்தில் Telecom Regulatory Authority of India ஒரு சேனலின் விலை நிர்ணயிக்கும் வழங்குநர்களால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சேனல் தீர்மானிக்கிறபடி, ஆணை வழங்கியது இதை…

6 hours ago

சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான…

6 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குடியரசு…

6 hours ago

paytm Republic Day Sale பவர்பேங்கில் அதிரடி ஆபர்

paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது இதனுடன்…

6 hours ago

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன் சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே சென்சாரும் வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7…

6 hours ago

இந்தியாவின் பெஸ்ட் டேப்லெட்கள்..!

Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India

6 hours ago