கலைப்பு… கலைப்பு… இலங்கை பாராளுமன்றம் கலைப்பு?

கொழும்பு: இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

அதிபர் வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், ஆதரவு அளித்ததையடுத்து சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா திடீரென யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்து பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து அவரையே பிரதமராகவும் நியமித்தார்.

இது இலங்கையில், பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரணிலும், ராஜபக்சேயும் பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் வரும் 14-ம் தேதி பார்லி. கூட்ட அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் திடீர் திருப்பாக இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என செய்திகள் பரவின. இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சி எம்..பி. அஜித் பீ பெரெரா வெளியிட்டுள்ள செய்தியில் பார்லி.யில் பெரும்பான்மை நிரூபிக்க தவறும் பட்சத்தில் பார்லி. கலைக்கப்படலாம் என்றார்.

அஜித் பீ பெரேராவின் பேட்டியை இலங்கை அரசின் தகவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. உடன் இலங்கை அரசின் தகவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்பது அடிப்படை ஆதாரமற்ற செய்தி தவறான தகவல். அரசுக்கு அப்படி ஒரு திட்டமில்லை. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லாத நிலையில் இறுதியாக இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றுதான் தெரிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Share
Tags: vivegam

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

2 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

2 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

2 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

2 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

2 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

2 hours ago