சிங்கள மக்களுக்கே இலங்கை சொந்தமானது : முத்தையா முரளிதரன் சர்ச்சைப் பேச்சு

கொழும்பு

சிங்கள மக்களுக்கே இலங்கை சொந்தமானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறி உள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் தமிழக வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் மனைவி சென்னையை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சர்வதேச அளவில் பல சாதனைகள் புரிந்த முத்தையா முரளிதரன் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு ஊடக நிகழ்வில் பேசும் போது முத்தையா முரளிதரன், “மக்கள் தங்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் இருந்து உரிமைகளையோ ஜனநாயகத்தையோ எதிர்பார்க்கவில்லை.
மூன்று வேளை உணவும் தடையில்லாத கல்வியையும் தா எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு நான் சொல்வத்ல் பல்ர் என்னை தவறாக எடுத்துக் கொண்டாலும் உண்மை நிலை இது தான்.

தமிழர்கள் பிரச்னை தொடர்பாக பேசி ஒரு தீர்வு காணாமல் தமிழ் அர்சியல்வாதிகள் உரிமை மற்றும் ஜனநாயகம் என பேசி காலத்தை வீணடிக்கின்றனர். இலங்கையில் 80%க்கு மேற்பட்டவர்கள் சிங்கள பவுத்தர்கள் என்பதால் இது அவர்களின் நாடுதான். அவர்களுக்கே இலங்கை சொந்தமானது. நாம் அதை ஏற்றுக் கொள்ளாவிடினும் நான் இங்கு சிறுபான்மையினர் என்பது உண்மை ஆகும்.

இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் உரிமை ஜனநாயகம் எனப் பேசி வருவது உண்மையில் தமிழ் மக்களுக்கு தேவை தானா என நான் கேட்க விரும்புகிறேன். சிங்களவர் அனைவரும் நமக்கு தவறிழைக்கவில்லை. சுமார் 5 சதவிகிதம் பேர் தவறு இழைத்திருக்கலாம். ஆரம்பத்தில் சரியான பாதையைல் பயணித்த பிரபாகரன் தொடங்கிய இயக்கம் பிறகு பயங்கரவாத இயக்கமாக மாறியது. அனைத்து தரப்பினரும் அப்போது நடந்த போரினால் பாதிக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தின் மூலமே தற்போதுள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்ட போராட்டங்களில் கலந்துக் கொள்பவர்களில் பெரும்பாலானோர் உணவுக்காகவும் வேறு சில பொருட்களுக்காகவும் கலந்துக் கொள்கிறார்கள்” என கூறி உள்ளார்.

முத்தையா முரளிதரனின் இந்த கருத்துக்கள் தமிழர்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago