திட்டங்களுக்கு நிதி உதவி பெறும் இந்தியாவில் பிரம்மாண்ட சிலை : இங்கிலாந்து எம் பி

லண்டன்

நலத் திட்டங்களுக்கு இங்கிலாந்து உதவி பெறும் இந்தியாவில் பிரம்மாண்ட சிலை வைப்பது முட்டள் தனமானது என இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கூறி உள்ளார்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தில் சர்தார் வல்லப்பாய் படேலுக்கு பிரம்மாண்டமான சிலை வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை 182 மீட்டர் உயரமானதாகும். உலகின் மிகவும் உயரமான இந்த சிலை குறித்து ஆளும் பாஜக அரசு பெருமையுடன் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன். இவர் இந்த உலகின் மிக உயரமான சிலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரான பீட்டர் போன், “இந்தியா தங்கள் நாட்டின் மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல நலத் திட்டங்க்ளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி உதவியை கடந்த 4 ஆண்டுகளில் பெற்றுள்ளது. அப்படி இருக்க உலகின் மிகப் பெரிய சிலையை நிறுவுவது முட்டாள் தனமானது” என கூறி உள்ளார்.

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago