இலங்கை நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவில் கலைக்க சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய அரசுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் என்பதால் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்தியால் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிகாரம் இல்லையென்றாலும் நாடாளுமன்றத்தை கலைக்க சிறிசேனா முடிவு செய்துள்ளது.இந்நிலையில் இது குறித்து,

சட்டவிரோத சதிமுயற்சியால் அதிபர் சிறிசேனா நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எம்.பி.
அஜித் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

2-வது சட்டவிரோத அரசியல் சதித்திட்டத்தை முன்னெடுப்பதாக கூறியுள்ளார். மேலும் தவறான அரசியல் முடிவுகளை எடுத்து நாட்டை அழிக்க முயற்சி செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.இந்த செய்தி அந்நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

DINASUVADU.

Leave a Reply