தேனை தலையில் தேய்த்தால் உண்மையாகவே முடி நரைக்குமா? எதோடு சேர்த்து தேய்க்கலாம்?

தேன் நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. நம் கிச்சனில் காணப்படும் முக்கிய பொருட்களில் தேனும் ஒன்று என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் அழகு பராமரிப்பிலும் இதன் நன்மை ஏராளம். பேஸ் பேக்குகளிலிருந்து, முகத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வரை இதன் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கிறது. இதோடு இதன் பயன் நிற்பதில்லை.

நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது. தேனை தலையில் தேய்த்தால் முடி நரைத்துவிடும் என்று சின்ன வயதிலிருந்தே சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று.

ஒரு இயற்கையான கண்டிஷனர் மாதிரி செயல்பட்டு கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் பிரச்சினைகளை களைகிறது.சரி வாங்க அதனுடைய நன்மைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தேனை தலையில் தேய்த்தால் உண்மையாகவே முடி நரைக்குமா? எதோடு சேர்த்து தேய்க்கலாம்? பயன்கள் இயற்கை வரப்பிரசாதம்

தேன் ஒரு இயற்கை வரப் பிரசாதம் என்றே கூறலாம். காரணம் இது நமது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. தலையில் உள்ள ஈரப்பதத்தை காத்து வறண்ட போகாமல் காக்கிறது. கூந்தல் உடைந்து போதல், பிளவுபட்ட முடிகள் மற்றும் கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

தேனை தலையில் தேய்த்தால் உண்மையாகவே முடி நரைக்குமா? எதோடு சேர்த்து தேய்க்கலாம்? ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள்

இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மை கூந்தலில் ஏற்படும் அழற்சி, தொற்றுகளை போக்குகிறது. சொரியாஸிஸ் போன்ற நோய்களை எதிர்த்து போரிடுகிறது. மேலும் தொற்று களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து முடியை வலுவாக்கி கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

தேனை தலையில் தேய்த்தால் உண்மையாகவே முடி நரைக்குமா? எதோடு சேர்த்து தேய்க்கலாம்? கூந்தலுக்கு நிறமூட்டுதல்

தேன் ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் ஆகும். எனவே இதை கூந்தலில் அப்ளே செய்யும் போது ஒரு இயற்கையான நிறத்தை கொடுத்து கூந்தலை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்கிறது. நீங்கள் தினமும் சாம்பு போட்டு குளித்த பிறகு 1 டீ ஸ்பூன் தேனை எடுத்து கூந்தலில் அப்ளே செய்து சில நிமிடங்கள் கழித்து அலசி வாருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கூந்தல் பளபளப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.

தேனை தலையில் தேய்த்தால் உண்மையாகவே முடி நரைக்குமா? எதோடு சேர்த்து தேய்க்கலாம்? ஈரப்பதத்தை தருதல்

நாம் தினந்தோறும் வெளியே செல்லும் போது நமது கூந்தல் மாசுக்கள், சூரிய ஒளி, தூசிகள் இவற்றால் வறண்டு பொலிவிழந்து போய் விடுகிறது. எனவே உங்கள் கூந்தல் பராமரிப்பில் தேனை சேர்க்கும் போது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சியை நீக்கி பொலிவாக்குகிறது.

தேனை தலையில் தேய்த்தால் உண்மையாகவே முடி நரைக்குமா? எதோடு சேர்த்து தேய்க்கலாம்? வேர்க்கால்களுக்கு வலிமை

தேன் ஒரு இயற்கையான மருந்து. இது நமது கூந்தலை வலிமையாக்குகிறது. இது வேர்க்கால்களுக்கு ள் சென்று அதை வலிமையாக்கி கூந்தல் உதிராமல் தடுக்கிறது. சரி வாங்க இப்பொழுது தேனைக் கொண்டு எப்படி வீட்டிலேயே கண்டிஷனர் தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம் .

தேனை தலையில் தேய்த்தால் உண்மையாகவே முடி நரைக்குமா? எதோடு சேர்த்து தேய்க்கலாம்? ஹனி ஹேர் கண்டிஷனர்

தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் 2 டேபிள் ஸ்பூன் மசித்த வாழைப்பழம் 1 டீ ஸ்பூன் யோகார்ட்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும் 1/2 மசித்த வாழைப்பழம், தேன் கலந்து அதனுடன் சேர்த்து கலக்கவும். நல்ல க்ரீம் மாதிரி வரும் வரை கலக்கவும்.

பிறகு அதனுடன் கொஞ்சம் யோகார்ட் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தலை மற்றும் கூந்தலில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். 20-25 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி நன்றாக உலர்த்துங்கள். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எனவே உங்கள் கூந்தல் பராமரிப்பில் தேனை சேர்த்து கொண்டு ஏராளமான நன்மைகளை பெறுங்கள்.

source: boldsky.com

Share

Recent Posts

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…

47 mins ago

பிரியாணி விற்றே சாதனை படைத்த கடை! அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா?

பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…

47 mins ago

இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?

புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…

47 mins ago

ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…

47 mins ago

இன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

47 mins ago

திருமணத் தடையால் தவிக்கிறீர்களா? அதற்கு என்ன செய்யலாம்!

திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…

47 mins ago