அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா… ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க…

நம்முடைய முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் என்னவாகும்.

கண்டிப்பாக உங்கள் கண்களைப் போலவே உங்கள் முகமும் களையிழந்து போய்விடும் அல்லவா.இந்த கருவளையம் நிறைய காரணங்களால் ஏற்படுகிறது.

மன அழுத்தம் சுற்றுப் புற மாசுக்கள் அதிகமாக மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஹார்மோன் பிரச்சினை வயதாகுதல் இப்படி நிறைய காரணங்களால் உண்டாகும் கருவளையத்தை நீங்கள் மேக்கப் போட்டு மறைக்க மட்டுமே முடியும்.
ஆனால் இது உங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கொடுக்காது. எனவே உங்கள் கருவளையத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றால் இயற்கை முறையை பின்பற்றுவது சிறந்தது.

அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா… ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க… கருவளையத்தை மறைக்கும் க்ரீம்கள்

இந்த கருவளையத்தை மறைக்க நிறைய க்ரீம்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லா வகை சரும வகைக்கும் சிறந்ததாக இருப்பதில்லை. எனவே எல்லாருக்கும் ஏற்ற விலை மலிவான ஒரு முறை என்றால் அது புதினா இலையைக் கொண்டு கருவளையத்தை போக்குவது.

அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா… ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க… புதினா இலை

புதினா இலை இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி கொண்டது. இதனால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையப் பகுதிகளில் இதை அப்ளே செய்யும் போது கருவளையத்தை எளிதாக போக்குகிறது. மேலும் இதிலுள்ள விட்டமின் சி சருமத்தின் நீட்சித் தன்மையை மேம்படுத்துகிறது.சரி வாங்க இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்

அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா… ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க… புதினா இலை, தக்காளி மற்றும் லெமன்

தக்காளி மற்றும் எலும்பிச்சை யில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

பயன்படுத்தும் முறை

1/2 தக்காளி பழம் மற்றும் கொஞ்சம் புதினா இலைகளை அரைத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். சிறுதளவு உப்பும் சேர்த்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கண்களுக்கு கீழே அப்ளே செய்து காய விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் உங்கள் கருவளையம் நீங்கி கண்கள் அழகு பெறும்.

அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா… ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க… புதினா மற்றும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சருமத்திற்கு நிறத்தை தருவதோடு ப்ளீச்சிங் வேலையையும் செய்கிறது.

பயன்படுத்தும் முறை

உருளைக்கிழங்கு மற்றும் ஒரு கைப்பிடியளவு புதினா இலையை எடுத்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்பொழுது இரண்டையும் நன்றாக அரைக்கவும். இப்பொழுது ஒரு காட்டன் பஞ்சில் இந்த பேஸ்ட்டை நனைத்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்பொழுது இந்த காட்டன் பஞ்சை கண்களில் வைத்து 15-20 நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும்.

அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா… ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க… புதினா இலைகள் மற்றும் லெமன் ஜூஸ்

இது ஒரு எளிதான முறையும் கூட.

பயன்படுத்தும் முறை

ஒரு கைப்பிடியளவு புதினா இலைகளை எடுத்து நன்றாக அரைக்கவும். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த பேஸ்ட்டை கண்களுக்கு கீழே அப்ளே செய்து 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவி துடைத்து விடுங்கள்.

அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா… ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க… புதினா மற்றும் ரோஸ் வாட்டர்

ஒரு கைப்பிடியளவு புதினா மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை பிரிட்ஜில் கொஞ்ச நேரம் வைக்கவும். காலையில் இந்த கலவையை எடுத்து வடிகட்டி ஒரு பஞ்சில் நனைத்து கண்களில் வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா… ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க… புதினா இலை, கடலை மாவு மற்றும் மஞ்சள்

இந்த முறை சருமத்தில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பளிச்சென்று ஆக்குகிறது. இப்பொழுது புதினா இலைகளை சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை கண்களுக்கு கீழே அப்ளே செய்து 15 நிமிடங்கள் வையுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும்.

மேற்கண்ட முறைகள் மூலம் உங்கள் கருவளையத்தை போக்கி பளிச்சென்ற கண்களை பெறலாம். ட்ரை பண்ணி பாருங்க.

source: boldsky.com

Share

Recent Posts

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…

1 hour ago

பிரியாணி விற்றே சாதனை படைத்த கடை! அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா?

பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…

1 hour ago

இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?

புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…

1 hour ago

ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…

1 hour ago

இன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

திருமணத் தடையால் தவிக்கிறீர்களா? அதற்கு என்ன செய்யலாம்!

திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…

1 hour ago