58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த உயிரினம் ஒன்றின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் பெயர் டிக்கின்சோனியா ஆகும். ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெள்ளை கடல் பகுதியில் இந்த டிக்கின்சோனியா கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் இந்த டிக்கின்சோனியா உயிரினத்தின் தடங்கள் ஏற்கனவே இருந்தாலும், ரஷ்யாவில் இருக்கும் இதுதான் மிகவும் பழமையானது.

முதலில் இது 30 கோடி வருடம் முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் தடயங்கள் அதைவிட பழமையானதாக உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் சிறிய சிறிய திசுக்கள் இப்போதும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதை வைத்து பல புதிய ஆராய்ச்சிகளை செய்ய உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply