ஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குட்டெரெஸ், வரும் 1-ம் தேதி இந்தியா வருகிறார்.ஐ.நா. பொதுச் செயலராக அவர் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை இந்தியா கொண்டாடும் வேளையில், அவரது பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹேபிடேட் சென்டரில் சர்வதேச சவால்கள், சர்வதேச தீர்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்து அவர் உரையாற்றுகிறார். அதன் பிறகு, சர்வதேச சூரியமின்சக்தி நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு செல்கிறார்.
4-ம் தேதி, அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் திரும்புகிறார்.

Leave a Reply