இறுதியில் இந்தியா ; இளம் தலைமுறை அசத்தல்

கொழும்பு: முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை தலைநகர் கொழும்புவில், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் நடக்கிறது. இன்று கொழும்புவில் நடந்த 5வது லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமுதுல்லா ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவான் (35) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா (89) அரைசதம் கடந்தார்.
இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரெய்னா (47) நம்பிக்கை அளித்தார். இந்திய அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் (2) அவுட்டாகாமல் இருந்தார்.சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (7), சவுமியா சர்கார் (1) ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த தமிம் இக்பால் (27) ஆறுதல் தந்தார். கேப்டன் மகமதுல்லா (11) நிலைக்கவில்லை. சபிர் ரஹ்மான் (27) ஓரளவு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் அரைசதடித்தார்.வங்கதேச அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. முஷ்பிகுர் (72) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து இந்திய அணி, 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என, 6 புள்ளிகளுடன் பைனலுக்கு முன்னேறியது.

Share

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

2 hours ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

2 hours ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

2 hours ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

2 hours ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

2 hours ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

2 hours ago