மும்பை: கட்சியின் உறுப்பினராக இல்லாத நாராயண ரானே வுக்கு பா.ஜ.எப்படி ராஜ்யசபா சீட் கொடுத்தது என சிவசேனா கேள்வியெழுப்பியுள்ளது.காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி.பதவிக்கு மார்ச் 23-ம் தேதி நடக்கிறது. இதில் பா.ஜ. சார்பில் மகாராஷ்டிராவில் இருந்து நாராயணரானே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் முன்னர் சிவசேனாவில் இருந்து விலகி காங். கட்சியில் இணைந்தார். அந்த கட்சியில் இருந்து விலகி தற்போது பா.ஜ.வில் ஐக்கியமாகியுள்ளார்.கட்சிவி்ட்டுகட்சி தாவிய நாராயணரானே குறித்து சிவசேனா கூறியது, பா.ஜ.விற்கு வேறு வேட்பாளர்களே கிடைக்கவில்லையா. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாராயணரானே சமீபத்தில்பா.ஜ. வில் இணைந்தார். அவர் அடிப்படை உறுப்பினராக இருக்க வாய்ப்பில்லை அவருக்கு பா.ஜ.
சீட் கொடுத்தது எப்படி, வேட்பு மனு தாக்கலில் எந்த விதிமுறையின் கீழ் வேட்பு மனு செய்வார் . இவ்வாறு சிவசேனா கூறியது..வேட்பு மனு தாக்கலில் நாராயண ரானேவுக்கு ரூ. 88 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply