காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம்..! அய்யாக்கண்ணு அறிவிப்பு.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்துவோம் என தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதைத் தடை செய்யக்கோரி குமரி முதல் கோட்டை வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்த இந்த பிரச்சார குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் டெல்லியில் இம்மாதம் 29-ம் தேதி தூக்கில் தொங்கும் போராட்டத்தினை நடத்துவோம். கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்துகிறது.

தமிழகத்தில் மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய மாநில அரசு பெயரளவிற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என எண்ணி விவசாயிகளை அரசு வஞ்சிக்கிறது. மகராஷ்டிராவில் விவசாயிகள் ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற்றுள்ளனர். அதே நிலை இங்கும் உருவாகும். மத்திய அரசு தமிழகத்தில்

விவசாயிகளை விரட்டி விட்டு அவரகளது கட்சிக்கு நிதி கொடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை நிறுவ முயல்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் கமுதியில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பவர் நிறுவனத்தை நிறுவியுள்ளனர். முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள குண்டாறு, ரெகுநாதகாவிரி, மலட்டாறு ஆகியவற்றில் மண்டியுள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன் அங்கு நடைபெறும் மணல் கொள்ளையினையும் தடுக்க வேண்டும்’ என்றார்.

Share
Tags: vikatan

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago