விரைவில் தனியார் மயமாகும் டாஸ்மாக்? மதுப்பிரியர்களின் கதி என்ன?

“கு டி குடியைக் கெடுக்கும்” ; “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு…” என்பன போன்ற வாசகங்களெல்லாம் பொதுமக்கள் பார்வைக்காக, போர்டுகளில் எழுதி வைப்பதற்கு மட்டும்தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.

தமிழ்நாட்டில் அரசுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டித் தருவதில் முக்கியமானதாகத் திகழ்கிறது டாஸ்மாக் மதுபானக் கடைகள். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளியிறுதி வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடங்கி வயது வித்தியாசமே இல்லாமல் தமிழகத்தில் கோடிக்கணக்கானோர் மது குடித்து வருவாயை அழித்துக் கொண்டிருப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களும், குறிப்பாக கிராமப்புற தாய்மார்கள், அரசுக்கு பல்வேறு நிலைகளில் புகார்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, தனியார் எடுத்துநடத்திவந்த மதுபானக் கடைகளை, 2001-2006-ம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசுடைமையாக்கி, கோடிக்கணக்கில் தனியார் கொள்ளையடித்துக் கொண்டிருந்த பணத்தை அரசின் பக்கம் திருப்பினார். பின்னர் வந்த தி.மு.க. அரசும் டாஸ்மாக் கடைகள் மூலம் கணிசமான வருவாயை ஈட்டியே ஆட்சி நடத்தியது.

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது டாஸ்மாக் கடைகளை மூடுவது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவது என்பன போன்ற முழக்கங்கள், வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

தி.மு.க-வைப் பொறுத்தவரை, அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், “தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும்; மதுவுக்கு அடிமையானவர்களை அத்தகைய பாதிப்புகளில் இருந்து மீட்டு, இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பும்வகையில், போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், 2016 மே மாதத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, முதல் கையெழுத்தாக மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். பின்னர், அவர், உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ம் தேதி மறைந்ததும், அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்று ஒரு ஆண்டு முடிந்துள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு முடிவெடுத்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது. தமிழகம் முழுவதும் 50 சதவிகிதம் அளவுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு இந்தக் கடைகள் மூலம் வந்துகொண்டிருந்த வருவாயில் பெருமளவு குறைந்துள்ளது. இதுபோன்ற சூழலில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக எவ்வளவு வருவாய் குறைந்துள்ளது என்பதை, அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மூலமாக அறிக்கை கேட்டுள்ளது அரசு. மேலும், மதுக்கடைகளை மூடுவதால் அவற்றில் பணிபுரியும் ஊழியர்களை மாற்று இடங்களுக்கு பணியமர்த்துவதிலும் அரசுக்கு கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், அரசின் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடும் முடிவும் அரசுக்கு வருவாய் இழப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது. இதனால், ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், ஆண்டுதோறும் டெண்டர் விட்டு, குறிப்பிட்ட தொகையை அரசுக்குச் செலுத்துவதுடன், தங்கள் கட்சிக்காரர்களையும் மகிழ்ச்சிப் படுத்தலாம் என்று கருதுகிறது ஆளும் அ.தி.மு.க. அரசு. படிப்படியாக மதுவிலக்கு என்ற தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற இந்த முடிவு தங்களுக்கு பலனளிக்கும் என்று அரசுத்தரப்பில் கருதுகிறார்கள். ஆனால், அவையெல்லாம் சாத்தியமா? தனியாருக்கு விடுவதால், அரசின் வருவாய் பாதிக்கப்படுவதுடன், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், மதுப் பிரியர்களைப் பொறுத்தவரை, அரசு நடத்தினால் என்ன, தனியார் நடத்தினால் என்ன, கடைகளை மூடாமல் இருந்தால் சரி என்கிறார்கள்.

மதுப்பிரியர்களின் கருத்து

டாஸ்மாக் தனியார் மயம் குறித்து, தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புஉணர்வு சங்கத்தின் நிறுவனத் தலைவர் பி.செல்லப்பாண்டியனிடம் பேசியபோது, “டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது வரவேற்கத்தக்கதே. மாநிலம் முழுவதும் மது அருந்துவோர் 61.4 சதவிகிதம் பேர் என்று சட்டசபையில் பேசிய தி.மு.க. உறுப்பினரே பதிவு செய்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் 100 ரூபாய் கொடுத்து மது வாங்கும் நுகர்வோர், ஒருவித குற்ற உணர்ச்சியுடனேயே அங்குள்ள பார்களில் குடிக்க வேண்டிய நிலைமை உள்ளது. டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கினால், எங்களைப் போன்ற மதுப் பிரியர்கள் அந்த முயற்சியை வரவேற்போம். ஏனென்றால், மதுக் கடைகளை தனியார் எடுத்து நடத்தும்போது, கடைகளுடன் இணைந்த பார்களும் சுகாதாரமான முறையில் சிறப்பாகப் பராமரிக்கப்படும். தவிர, டீக்கடைகளில் கூட உட்காருவதற்கு டேபிள், சேர் வசதி செய்து தரப்படுகிறது. சுற்றுப்புறம் சுகாதாரமாக வைக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பார்கள் இப்போது முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. தண்ணீர் பாட்டில் உள்பட விற்பனை செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. தனியார் பார்கள் என்றால் எங்களுக்கு தரமான பொருள்கள் கிடைக்கும். மதுபாட்டில்களுக்கான விலையைத் தவிர, தண்ணீர் உள்பட இதர பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். அதேநேரத்தில் மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகள் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். அப்போதுதான், தனியார் கடைகளுக்கு தரமான மதுவகைகள் போய்ச் சேர ஏதுவாகும். எனவே, டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்” என்றார்.

மாநிலம் முழுவதும் 50 சதவிகிதம் கடைகள் மூடப்பட்டபோதிலும் 25 சதவிகிதம் வருவாய் மட்டுமே குறைந்துள்ளது. குறிப்பிட்ட கடைகளில் வழக்கமாக மது பாட்டில்கள் வாங்குவோர், அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று வாங்குவதால் அந்தக் கடைகளில் வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். எனவே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 500 கடைகளும், அண்மையில் 500 கடைகளும் மூடப்பட்ட போதிலும் வருவாயைப் பொறுத்தவரை பெரிய அளவில் குறையவில்லை என்கிறார்கள் அவர்கள்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், தனியார் மயமாக்கப்பட்டாலும் ‘குடிமகன்கள்’ என்னவோ தங்களின் முடிவை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

Share
Tags: vikatan

Recent Posts

TRAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்ளிகேஷன் இப்பொழுது உங்களுக்கு எளிதாகும்

சிறப்பு செய்திசமீபத்தில் Telecom Regulatory Authority of India ஒரு சேனலின் விலை நிர்ணயிக்கும் வழங்குநர்களால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சேனல் தீர்மானிக்கிறபடி, ஆணை வழங்கியது இதை…

7 hours ago

சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான…

7 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குடியரசு…

7 hours ago

paytm Republic Day Sale பவர்பேங்கில் அதிரடி ஆபர்

paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது இதனுடன்…

7 hours ago

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன் சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே சென்சாரும் வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7…

7 hours ago

இந்தியாவின் பெஸ்ட் டேப்லெட்கள்..!

Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India

7 hours ago