காஷ்மீர் பனிச்சரிவுக்கு பாக். படைகள் தாக்குதலும் ஒரு காரணம்: ராணுவ தளபதி பிபின் ராவத்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட பாகிஸ்தான் படைகளின் தாக்குதலும் ஒரு காரணம் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு வீரரின் உடல், இன்று, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பிபின் ராவத் கூறுகையில், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாற்பாடு மட்டுமல்லாது பாகிஸ்தான் படைகளின் தாக்குதலும் காஷ்மீரில் பனிச்சரிவு ஏற்பட முக்கியமான காரணம் என்று பிபின் ராவத் தெரிவித்தார்.
காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கையெறிகுண்டுகள், கனரக ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதால் பனிப்பாறைகள் தளர்ந்து பனிச்சரிவு ஏற்படுகிறது எனவும் அவர் கூறினார். காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஷ் ராணுவ முகாம் பகுதியில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக, ராணுவ வீரர்களின் உடல்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் உடல்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன

Share
Tags: dinamani

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago