39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே அழைப்பர். இவர் பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்த இவர், 2012 இல் நடிகர் சயிப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளான்.

பொதுவாக பெண்கள் திருமணமாகி குழந்தை பிறந்த பின், தங்களது இளமையைத் தொலைத்துவிடுவார்கள். ஆனால் கரீனா கபூர் குழந்தை பிறந்த பின்னரும் சுருக்கமில்லாத பொலிவான சருமத்துடன் அழகாக காட்சியளிக்கிறார். மேலும் இவர் மற்ற நடிகைகளைப் போல் அடிக்கடி மேக்கப் போடமாட்டார்.
பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் தான் இருப்பாராம்.

மொத்தத்தில் மேக்கப் போடாமல் அழகாக காட்சியளிக்கும் ஓர் பாலிவுட் நடிகை என்றால் அது கரீனாவாகத் தான் இருக்கும். உங்களுக்கு கரீனா கபூரின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பாலிவுட் நடிகைகள் அனைவரும் தவறாமல் பின்பற்றும் ஓர் செயல் தான் நீரை அதிகம் குடிப்பது. கரீனாவும் தினமும் குறைந்தது 4-6 பாட்டில் நீரைக் குடிப்பாராம். அதுவும் இவர் மினரல் வாட்டரைக் குடிக்கமாட்டார், சாதாரண நீரைத் தான் குடிப்பாராம். சொல்லப்போனால், அவரது சரும அழகிற்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் காரணமே அந்த சாதாரண நீர் தானாம்.

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க… மாய்ஸ்சுரைசர்

நீர் உடலின் உட்பகுதியை வறட்சி அடையாமல் தடுக்கும். அதே சமயம் சருமத்தின் வெளிப்பகுதியை நல்ல மாய்ஸ்சுரைசர் வறட்சி அடையாமல் தடுக்கும். கரீனா கபூர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவாராம். இவர் எங்கு சென்றாலும், தனது கைப்பையில் எப்போதுமே ஒரு மாய்ஸ்சுரைசரை வைத்திருப்பாராம்.

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க… பாதாம் எண்ணெய்

கரீனா கபூரின் ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கிய காரணம் பாதாம் எண்ணெய். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோடு, அப்போதெல்லாம் பாதாம் எண்ணெய் கொண்டு தனது சருமம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்வாராம். இந்த பழக்கம் அவரது அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க… தேன் மசாஜ்

தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் கரீனாவைப் போன்று யாரும் தேனை சருமத்திற்கு பயன்படுத்தமாட்டார்கள். இவர் தினமும் தேனைக் கொண்டு சருமம் முழுவதும் தடவி மசாஜ் செய்வாராம். இதனால் தான் மேக்கப் போடாமலும் இவர் அழகாக தெரிவதாகவும் கூறுகிறார்.

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க… நேச்சுரல் ஃபேஸ் பேக்

கரீனா கபூர் இயற்கை பொருட்களை மட்டுமே தங்களது சருமத்திற்கு பயன்படுத்துவாராம். கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு எவ்வித பராமரிப்புக்களையும் கொடுக்கமாட்டாராம். அதிலும் இவர் முகத்திற்கு மூலிகைப் பொருட்களைக் கொண்டு தான் ஃபேஸ் பேக் போடுவாராம். இவர் ஃபேஸ் கிளின்சராக தயிர் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து பயன்படுத்துவாராம். தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கிவிடும்.

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க… உடற்பயிற்சி

கரீனா கபூர் பிரசவத்திற்கு பின் எடையைக் குறைக்க மேற்கொண்ட பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் இவர் தனது பழைய உடலமைப்பைப் பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கரீனா கபூர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கும், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெறுவதற்கும் காரணமாக இருந்தது உடற்பயிற்சி என்று நம்புகிறார். மேலும் இவர் எப்போதுமே தனது உடற்பயிற்சியை செய்யும் பழக்கத்தை கைவிட்டதே இல்லையாம்.

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க… கரீனாவின் சரும பராமரிப்பில் இருந்து பின்பற்ற வேண்டியவைகள்:

* தினமும் குறைந்தது 6-8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.

* குறைந்த அளவில் மேக்கப் போடுவதோடு, தூங்குவதற்கு முன் மேக்கப் முழுவதையும் நீக்க மறக்க வேண்டாம்.

* சருமத்தைப் பராமரிக்க ஹெர்பல் பொருட்களை மட்டும் பயன்படுத்தவும்.

* சருமத்திற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக நேச்சுரல் ஃபேஸ் பேக் அல்லது மாஸ்க் பயன்படுத்தவும்.

source: boldsky.com

Share

Recent Posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ 72 உயர்வு. வாடிக்கையாளர்கள் கவலை..!!

தங்கம் விலை கிராமுக்கு ரூ 09 மற்றும் பவுனுக்கு ரூ 72 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது…

25 mins ago

ஏறுமுகத்தில் தங்கம் விலை : சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.29,328க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.29,328க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3,666 க்கு விற்பனையாகிறது. அதே…

25 mins ago

ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..! குதூகலத்தில் முகேஷ் அம்பானி!

என்ன தான் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் என பல பிரச்னைகள் இருந்தாலும் பணக்காரர்கள், எப்போதுமே பணக்காரர்களாகத் தான் இருந்து வருகிறார்கள்.அந்த வரிசையில்…

25 mins ago

இன்றைய (19.10.2019) தங்கம் விலையை கேட்டு இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள்.!!

கடந்த மூன்று வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்து வந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை…

25 mins ago

100 கோடிக்கு மேல் சம்பளமா..? வருமான வரித் துறை தகவல்..!

சம்பளம் என்றால் என்ன நம் ரேஞ்சுக்கு மாதம் ஒரு 30,000 அல்லது 40,000 ரூபாயாக இருக்கும். துறை ரீதியாக, 10 - 15 ஆண்டுகள் நல்ல அனுபவம்…

25 mins ago

வோடபோன் DOUBLE DATA ஆஃபரை பெறுவது எப்படி?

வோடபோன் நிறுவனம், தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டாவை இரட்டிபாக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது டபுள் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. அதன் படி,…

25 mins ago