ஒரு ஆட்டோவில் 24 பேர் பயணம்: அதிர்ச்சியடைந்த காவலர்! வைரல் வீடியோ

தெலங்கானாவில் ஒரே ஆட்டோவில் 24 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நம்மில் பலர் பயணம் செய்வதற்கு ஆட்டோவை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறைந்த கட்டணத்தில் விரைவாக சென்று சேர்வதற்காக தான் இருக்கும். பெருகி வரும் மக்கள்தொகையின் காரணமாக பலர் லாபத்திற்காக ஆட்டோவை ஷேர் ஆட்டோவாக பயன்படுத்தி வருகின்றனர். ஷேர் ஆட்டோவிலும் அதிக அளவிலான பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதைப் பார்த்திருப்போம். சென்னை போன்ற பெருநகரங்களில் பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் ஷேர் ஆட்டோவில் ஒருவர் மடி மீது மற்றொருவர் அமர்ந்து செல்லும் அளவில் கூட்டம் அலைமோதும்.
குறைந்தபட்சம் ஒரு ஆட்டோவில் 10 பயணிகள் முதல் 15 பேர் வரை நம்ம ஊர்ல பயணம் செய்வதை பார்த்திருப்போம். இவர்கள் அனைவரையும் மிஞ்சும் படி தெலுங்கானாவில் 24 பயணிகளை ஏற்றி சென்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநர். அதிக அளவிலான் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் பயணிகளை கீழே இறங்க சொல்லி உள்ளனர்.

People should take care of their own safety. They shouldn’t board in overcrowded passenger autos unmindful of their safety pic.twitter.com/Aul2l2LM7C

– CP KARIMNAGAR (@cpkarimnagar) August 11, 2019
ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உட்பட 24 பேர் உள்ளதை போலீசார் கணக்கெடுத்து காட்டி உள்ளனர். இந்த வீடியோவை கரீம்நகர் காவல் ஆணையர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் மக்கள் தங்களது பயணத்தில் பாதுகாப்பை அவர்கள் தான் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்ள கூடாது என்றும் அதில் பதிவிட்டுள்ளனர்.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago