கலிபோர்னியா நகரத்தின் மேயராக இந்தியர் தேர்வு

வாஷிங்டன்: கலிபோரனியாவில் உள்ள தெற்கு சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக இந்திய வம்சாளவியை சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். இரண்டாவது இந்தியர்: இது தொடர்பாக மீடியாவில் வெளியான செய்தி: சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவரான பிரதீப் குப்தா என்பவர், மேயராக சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்று கொண்டார். இதன் மூலம் மேயராக தேர்வாகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்தா மேயராக தேர்வாவதற்கு முன்னர், இந்த தென் சான் பிரான்சிஸ்கோ நகர கவுன்சில் உறுப்பினராக, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 31ல் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2013 நவம்பரில் முழு உறுப்பினராக தேர்வானார். தென் சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் திட்டக்குழு உறுப்பினராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இந்த நகரத்தின் துணை மேயராகவும் குப்தா பணியாற்றியுள்ளார். பெருமை: பிரதீப் குப்தா கூறுகையில், மேயராக தேர்வாகியுள்ளது பெருமையளிக்கிறது. நகரத்தின் முன்னாள் மேயர் மார்க் அடிகோ துவக்கிய பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கவுன்சிலில் பல குழுக்களை சேர்ந்த சிறந்த மக்கள் உள்ளனர். அவர்களில் நகரத்திற்கு பல ஆண்டுகள் சேவை செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago