ஹூண்டாய் கோனாவை கொடியசைத்துத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்..!

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரான ஹூண்டாய் கோனாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஹூண்டாய் கோனா 25.30 லட்சம் ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவின் முதல் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை கோனா பெற்றுள்ளது. வடிவமைப்பில் முற்றிலும் ஹூண்டாய் க்ரெட்டாவின் தோற்றத்திலேயே கோனா உள்ளது. மெல்லிய எல்இடி லைட் உடன் ஹூண்டாவின் அடையாளமான க்ரில் பம்பர் முன்புற பானட்டில் பொருத்தப்பட்டுள்ளது. கோனாவில் உள்புறத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல தொழில்நுட்ப அப்டேட்கள் உடனான கோனாவில் 7 இன்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், ஸ்மார்ட்ஃபோன் கனெக்‌ஷன், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நேவிகேஷன் அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வாகனம் இயக்கும் போது மட்டுமே இயங்கும் ஏசி என எலெக்ட்ரிக் கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. 39.2 kWh லித்தியம் பேட்டரி கொண்ட கோனா, முழு சார்ஜ் ஏற 6 மணி நேரம் ஆகிறது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 452 கி.மீ வரையில் பயணிக்க முடியும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கூடுதலாக வால் சார்ஜர் வேண்டுமென்றால் வழங்கப்படும்.வால் சார்ஜர் விலை 70 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் ஆகும். ஏசி சார்ஜர் மூலம் 1 மணி நேரத்துக்கு சார்ஜ் ஏற்றி 50 கி.மீ வரையில் பயணிக்கலாம்

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago