`மணிக்கு 1,200 கி.மீ செல்லும் வாகனம்’ – சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் குழு சாதனை

அமெரிக்காவில் நடக்கும், ‘ஹைப்பர் லுாப்’ போட்டியில் பங்கேற்க, சென்னை, ஐ.ஐ.டி தகுதி பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள `ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் ஹைபர் லூப் தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. வாகனங்கள் செல்ல ட்யூப் போன்ற அமைப்பை அதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மிக விரைவாகப் பயணிக்க முடியும் என்பதே ஹைப்பர் லூப் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 1,600 குழுக்கள் கலந்துகொண்டன.
அதில் 21 குழுவினர் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே சென்னை ஐ.ஐ.டி-யைச்சேரந்த குழு மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி-யின் 30 மாணவர்களைக்கொண்ட `அவிஷ்கார்’ என்ற குழு ஹைபர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிவேக வாகனத்தின் மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வாகனமானது மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியதாகும். அவிஷ்கார் குழுவின் தலைவர் சுயாஷ்சிங் இந்தப் போட்டி தொடர்பாக பேசுகையில்,“நிறைய சோதனைகள், ஆய்வுகள், பாதுகாப்பு அம்சங்கள், சாத்தியக்கூறுகள் அடிப்படையில் இதை உருவாக்கியுள்ளோம்” என்றார். இந்தக் குழுவினர் உருவாக்கியுள்ள வாகனம் 3 மீட்டர் நீளமும் 12 கிலோ எடையும் கொண்டது. பல்வேறு தரப்பினரும் இந்தக் குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். ஜூலையில், அமெரிக்காவில் நடக்கும் இறுதிப் போட்டியில் அவிஷ்கார் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

Share
Tags: vikatan

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago