ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..?

இப்போதெல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் முடியை பராமரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உண்மையில் இது நல்ல விஷயம் கூட. முன்பெல்லாம் முடியை கண்டு கொள்ளாமலே இருக்கும் ஆண்கள் பலரும் இன்று, அதனை கவனத்துடன் பார்த்து கொள்கின்றனர். முடியை பராமரிக்காமல் இருந்தால் நமது முடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி, வழுக்கை விழுந்து விடும்.

இன்றைய மக்கள் தொகையில் ஆண்களுக்கே வழுக்கை அதிகமாக உள்ளது. முடி தான் நம்மை தனித்துவமான முறையில் அடையாளம் காட்டுகிறது. நமது முடிக்கு இந்த பெருமையை தருவது முடியை வெட்டும் முறைதான். முடியை கண்டபடி நாம் வெட்டினால் அது நமது அழகை குறைத்து விடுமே தவிர, அதிகரிக்காது. எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல்கள் உங்களை 10 வயது குறைந்தவரை போல காட்ட கூடும் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

நாம் ட்ரெண்டானவரா அல்லது பழமைவாதியா என்பதை நமது ஹேர்ஸ்டைலே பேசி விடும். நாம் சாதாரணமாக வெட்டும் ஹேர்ஸ்டைல்கள் அவ்வளவும் நம்மை எடுத்து காட்டாது. இதுவே உங்களின் முக வாட்டத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் இருந்தால் அட்டகாசமாக இருக்கும்.

ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..? வெட்டும் முறை…

முடியை எப்போதும் வழித்து கொண்டு வெட்டாமல், மேல் நோக்கிய படி வெட்டினால் இளமை துள்ளலாக இருக்கும். மேலும், முடியை ஒட்ட வெட்ட கூடாது. இதுவும் அழகான பொலிவை உங்களுக்கு தராது. மேலும், அடர்த்தியான முடி கொண்டவர்கள் முடியை நீளமாக வளர்த்து கொள்ளாமல், மேல் நோக்கியபடி வெட்டினால் நல்லது.

ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..? ஷேவ் முக்கியம்..!

தலை முடியை பற்றி பேசும்போது தாடியின் முடியை நாம் மறந்து விட கூடாது. தாடியின் முடி அழகாக இருந்தால் தான் ஒட்டுமொத்தமாக நம்மை இளமையாக மாற்றும். எனவே, எப்போதும் ஷேவ் செய்தபடி இருந்தால், உங்களை இது இளமையாக காட்டும்.

ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..? வெள்ளை வெள்ளை..!

உங்களுக்கு 10 வயது குறைய வைக்க முதலில் உங்களின் முடியில் உள்ள வெள்ளைகளை விரட்டி அடியுங்கள். அதாவது, வெள்ளை முடிகளை இயற்கை முறையில் கருமையாக மாற்றுங்கள். இதுதான், உங்களை இளமையாக காட்ட சிறந்த வழி.

ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..? எப்போவுமே புதுமை..!

உங்களுக்கு 30 வயசோ, அல்லது 40 வயசோ..! எதுவாக இருந்தாலும் இளமை உங்களிடம் தான் உள்ளது என்பதை மறவாமல் புது புது விதமான ஹேர் ஸ்டைல்களை வெட்டி கொள்ளுங்கள். இது உங்களை பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தை தரும்.

ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..? வழுக்கையா..?

உங்களது தலையில் ஒரு சில இடத்தில் மட்டும் முடி இல்லாமல் இருக்கிறதா..? இது உங்கள் அழகை முழுவதுமாக கெடுக்கிறதா..? இனி இதற்கு தீர்வு இதுதான். வழுக்கை தெரியாமல் இருக்க, முழுவதுமாக மொட்டை அடித்து விடுங்கள். இது கேட்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் உங்கள் வழுக்கை பிரச்சினையை தீர்க்க இது சிறந்த முடிவாக இருக்கும்.

ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..? வகுடு எடுத்த தலையா..?

நீங்கள் இளமையாக தெரிய வேண்டுமென்றால் வகுடு எடுத்தபடி வாராதீர்கள். இது உங்களின் அழகை பாழாக்கி விடும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், முடியை கீழ் நோக்கியபடியும் வாராதீர்கள்.

ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..? இது நல்லா இருக்கும்..!

சில ஆண்கள் அதிக இளமையாக தெரிய, தலையின் இரு புறத்தில் இருக்க கூடிய முடியையும் கொஞ்சம் ட்ரிம் செய்து, மற்ற இடத்தில் முடியை அதிகமாக இருக்கும் படி முடியை வெட்டுவார்கள். இது ஹேர்ஸ்டைல் நன்றாக இருக்கும். இத்துடன் குறுந்தாடியும் இருந்தால் மிக சிறப்பு.

source: boldsky.com

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago