மனைவியை பிரிந்தார் அமேசான் நிறுவன தலைமை நிர்வாகி

நியூயார்க்: விவாகரத்து செய்தார்… மனைவியை பிரிந்து விட்டார் அமேசான் நிறுவன தலைமை நிர்வாகி ஜெப்.

அமேசான் நிறுவன தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ் தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ் (53). உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.

இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இவருக்கு மெக்கென்சி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஜெப் பெஜோஸ், மெக்கென்சி தம்பதி கூட்டாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாங்கள் பரஸ்பரம் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்”.
“இனி அவரவர் தனித்தனியாக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் எங்களின் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக, நண்பர்களாக, செயல்படுவோம்”. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அமேசான் நிறுவனத்தில் பெருமளவு பங்குகள் மெக்சென்சிக்கு உள்ளன. தற்போது இருவரும் பிரிவதால் பங்குகளும் பிரியும். இதனால் அமேசான் நிறுவனத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share
Tags: vivegam

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

7 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

7 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

7 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

7 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

7 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

7 hours ago