Realme U1 நாளை பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது…!

ரியல்மி பிரான்டு தனது புதிய யு1 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது, அதனை தொடாந்து ஏற்கனவே அறிவித்தபடி இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ஆன நாளை டிசம்பர் 5 பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். சிப்செட் AI . என்ஜின், GPU அக்செலரேஷன் மற்றும் கேமிங் மோட் கொண்டுள்ளது.

பின்புறம் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி யு1 ஸ்மாரட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 3500 Mah . பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி யு1 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2350×1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. + ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர் – 900MHz ARM மாலி-G72 MP3 GPU – 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி – 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – டூயல் சிம் ஸ்லாட் – ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2 – 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2 – 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 – 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார் – 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் – 3500 Mah பேட்டரி

ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் பிரேவ் புளு, ஆம்பிஷியஸ் பிளாக் மற்றும் ஃபியரி கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என வைக்கப்பட்டுள்ளது

அறிமுக சலுகைகள்:

ரியல்மி யு1 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் சபி பேங்க் கார்டுகளை கொண்டு வாங்கும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் EMI வசதியும் வழங்கப்படுகிறது மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.5,750 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் 4200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே வெப்சைட்டில் புதிய ஸ்மார்ட்போனுக்கான அழகிய கேஸ்களும் ரூ.499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

9 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

9 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

9 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

9 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

9 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

9 hours ago