டிசம்பர் 10 அறிமுகமாகிறது உலகின் முதல் O டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்…!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் டிசம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங்கின் புது கேலக்ஸி ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் முதல் முறையாக முதல் முறை இன்பினிட்டி -O டிஸ்பிளே உடன் வருகிறது.

ஏற்கனவே இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் . (FCC) வெப்சைட்டில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன் டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க வெப்சைட்டில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.

சாம்சங் மற்றும் ஹூவாய் என இரு நிறுவனங்களுக்கும் போ (BOE) LCD .டிஸ்ப்ளேவினை விநியோகம் செய்ய இருக்கிறது. எனினும், நோவா 4 மாடலை விட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே தலைசிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A8S எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர் – அட்ரினோ 616 GPU – 6 ஜி.பி. ரேம் – 128 ஜி.பி. மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ – டூயல் சிம் ஸ்லாட் – 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 – 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ் – 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2 – 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 – கைரேகை சென்சார் – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி – 3400 Mah .பேட்டரி – அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும்

Share

Recent Posts

குற்றப் பத்திரிகை! ‘மாஜி’ சிதம்பரம் , மகன் கார்த்தி மீது…

புதுடில்லி:'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை…

13 hours ago

விசாரணையில் விவசாயி பலி: டி.எஸ்.பி., மீது வழக்கு

ஹபூர்,:உத்தர பிரதேச மாநிலத்தில், விசாரணையின் போது போலீசார் கடுமையாக தாக்கியதில், விவசாயி உயிரிழந்த வழக்கில், டி.எஸ்.பி., உட்பட நால்வர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி…

13 hours ago

நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை அதிர்ச்சி! எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்

புதுடில்லி, :நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில், 38 சதவீதம் தரமற்றது என்பது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு தரச்சான்று நிர்ணய அமைப்பு…

13 hours ago

உ.பி.,யில் பட்டப்பகலில் ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தர பிரதேசத்தில், பட்டப்பகலில், ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி…

13 hours ago

முன்னாள் பயங்கரவாதி டில்லியில் கைது

ஜம்மு,: ஜம்மு - காஷ்மீரில், 1990ல், நான்கு விமானப்படை வீரர்களை படுகொலை செய்த, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த முன்னாள் பயங்கரவாதி ஜாவித் அகமது மிர்…

13 hours ago

பாக்.,குக்கு எப்.ஏ.டி.எப்., எச்சரிக்கை: கடும் நடவடிக்கை எடுக்க

புதுடில்லி :பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில், பாகிஸ்தானை, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப்., முடிவு செய்துள்ளது. 'பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை…

13 hours ago