ரூ.78-க்கு 20ஜிபி டேட்டாவை வழங்கிய பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக மலிவு விலையில் சிறப்பு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி ரூ.78 விலையில் 20ஜிபி டேட்டா

சலுகையை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த புதிய பிரீபெயிட் சலுகையை நாடு முழுக்க 20 வட்டாரங்களில் உள்ள மக்கள் பயன்படுத்த முடியும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.78 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது, பின்பு இதனுடன் காலிங் வசதியும் வழங்கப்படுகிறது.
இருந்தபோதிலும் காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்கள் மொபலில் STV COMBO78′ என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பத்து நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பிஎஸ்என்எல் (ரூ.78) சலுகையில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80கே.பி-யாக குறைக்கப்படும் என்றுபிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.1,699 சலுகை திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா 4ஜி தரவரிசையில் வழங்கப்படுகின்றது. தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்தியேக ரிங்டோன் பேக் போன்ற அனைத்துச் சேவைகளும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.2.099 சலுகை திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்தியேக ரிங்டோன் பேக், தினமும் 4 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட சேவைகள் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

source: gizbot.com

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago