இந்தியாவில் அறிமுகமானது பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா

பிரபலமான பியூஜிபிலிம் இந்தியா நிறுவனம், பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா போன்றவை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நவீன இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர்களை பயன்படுத்தி கிரெடிட் கார்டு அளவில் புகைப்படங்களை 10 செகண்டுகளில் எடுக்க முடியும். இதுதவிர, பியூஜிபிலிம், டைலர் ஷிப்ட்களுடன் இணைந்து, SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா ஒன்றையும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரிண்டர் மற்றும் கேமராக்கள் இந்தியாவில் உள்ள பியூஜிபிலிம் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ரீடெய்லர்களிடம் கிடைக்கும்.

பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2-வில் எடுக்கப்படும் இமேஜ்களின் 62x46mm அளவு கொண்டதாகவும், இந்த இமேஜ்களின் பிரிண்டிங் ரெசலுசன் 320dpi கொண்டதாக இருக்கும். மேலும் இந்த 256 கலர் பிரிண்ட் செய்யும் வகையில் செட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த பிரிண்டர்கள் மூன்று கலர் எக்ஸ்போசர் மற்றும் OLED முறையை பயன்படுத்தும் வகையில் இருக்கும்.

இதுமட்டுமின்றி 2.4GHz வை-பை பேன்ட் மற்றும் இன்புட் மற்றும் அவுட்புட்களில் 10 செகண்ட் பப்பர் கொண்டதாக இருக்கும். இந்த பிரிண்டர் 100 பிரிண்ட்கள் வரை பிரிண்ட் செய்யும் திறன் கொண்டது. இந்த இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, 89.5x131x40mm அளவுகளுடன், பேட்டரி மற்றும் பிலிம் பேக் பொருத்தப்படாத நிலையில், 250 கிராம் எடையுடன் இருக்கும்.

இன்ஸ்டாஸ் ஷேர் மொபைல் ஆப்கள் மூலம், பில்டர்கள் மற்றும் டெம்ப்ளேட்களை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் இந்த ஆப் மூலம் பிரைட்ன்ஸ் மற்றும் காண்டிராஸ்ட் மற்றும் சட்சுரேஷன் போன்றவற்றை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். மேலும் இதில் உள்ள கொலாஜ் டெம்ப்ளேட் வசதி மூலம் இரண்டு முதல் நான்கு இமேஜ்களையும் ஒன்றாக இணைக்கவும், ஸ்பிலிட் டெம்ளேட் மூலம் இமேஜ்களை பிரிக்கவும் முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் பிரிண்டர்கள் இந்தியாவில் 13 ஆயிரத்து 499 ரூபாய் விலையில் கோல்ட் மற்றும் சில்வர் கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது.

இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா இந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கேமராவின் மூலம் பிளாக் பாடி பேஸில் கோல்ட் கலர் நியூஸ்பேப்பர் பேர்டனில் பிரிண்ட் செய்ய முடியும். இதற்காக இந்த கேமராவில் மெட்டாலிக் ரிங்களுடன் கூடிய லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த கேமராவில் ஆட்டோ, செல்பி, மெக்ரோ, லேண்ட்ஸ்கேப் மற்றும் டபுள் எக்ஸ்போசர் என ஐந்து ஷூட்டிங் மோடுகள் உள்ளன.

டபுள் எக்ஸ்போசர் மோடு, கேமராவில் சூட் செய்யப்படும் சிங்கிள் இமேஜ்சை இரண்டு முறை பதிவு செய்ய உதவும். மெக்ரோ மோடு மூலம் 30cm வெளியில் இருந்து இமேஜ்களை பதிவு செய்யலாம், லேண்ட்ஸ்கேப் மோடில், லாங்-ரேஞ்ச் புகைப்படங்களை எடுக்கலாம். இந்த கேமரா 118.7×128.1×58.1mm மற்றும் இந்த கேமராவின், பேட்டரி, ஸ்டிராப் மற்றும் பிலிம் பேக் இல்லாமால் எடை 393 கிராம் கொண்டதாக இருக்கும். டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமராகள் சோல்டர் ஸ்டிராப்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமராகள் இந்தியாவில் 14 ஆயிரத்து 499 ரூபாய் விலையிலும் இந்த கேமராவுக்கான பேக் பிலிம்கள் 899 ரூபாய் விளையிலும் கிடைக்கிறது.

Share

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

2 hours ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

2 hours ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

2 hours ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

2 hours ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

2 hours ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

2 hours ago