ஆண்ட்ராய்டு பீட்டாவிற்கான வாட்ஸ்அப் பிரைவேட் ரிப்ளே அம்சம் அறிமுகம்.!

இந்த பயனுள்ள வாட்ஸ்அப் புதிய அம்சம், ஆண்ட்ராய்டு பீட்டா போன்களில் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, பிரைவேட் ரிப்ளே என்ற பெயரிலான ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருவதாக பல செய்திகள் வெளியாகின. மேலும் இந்த அம்சத்தை விண்டோஸ் ஃபோன் பீட்டா பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தது. இந்நிலையில் தற்போது இந்த அம்சத்தை, ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பிற்கான அப்ளிகேஷனுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த அம்சத்தை கொண்ட ஒரு நிலையான பதிப்பை கொண்ட அப்ளிகேஷனை, பயனர்களுக்கு விரைவில் அளிக்கப்படலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

WA பீட்டா இன்ஃபோ பொறுத்த வரை, இந்த நவீன வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பான 2.18.335 இல், பிரைவேட் ரிப்ளே அம்சம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி, ஒரு குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாத நிலையில், ஒரு உறுப்பினர் மட்டும் தனிப்பட்ட முறையில் பயனர்கள் மெசேஜ்களை அனுப்ப முடியும்.

குறிப்பாக, ஏற்கனவே வாட்ஸ்அப்பில், ஒரு குரூப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அளிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சமும் அதை போன்று ஒத்ததாக இருந்தாலும் இதன் தனிப்பட்ட பதில் அளிக்கும் செயல்பாடு மூலம் குறிப்பிட்ட உறுப்பினர் உடன் தனிப்பட்ட செட் செய்ய உதவும். அதாவது ஒரு குரூப்பில் உள்ள ஒரு உறுப்பினருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் மெசேஜ்களை அனுப்ப முடியும். அதை அந்த குரூப்பில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாது.

வாட்ஸ்அப்பின் இந்த புதிய ரிப்ளே பிரைவேட் அம்சத்தை பயன்படுத்த, ஒரு குரூப்பில் உள்ள குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் மீது நீண்டநேரம் அழுத்துவதன் மூலம், அவருக்கு தனிப்பட்ட முறையில் நாம் பதில் அளிக்க முடியும். இப்படி நீண்டநேரம் அழுத்துவதன் மூலம் விண்டோவின் வலது முனையின் மேற்பகுதியில் பயனருக்கு மூன்று தேர்வுகள் கொண்ட டேப் காட்டப்படும். இதில் ஒன்றாக ரிப்ளே பிரைவேட்லி ஆக இருக்கும். இதன் மீது கிளிக் செய்து, நாம் அனுப்ப வேண்டிய செய்தியை டைப் செய்யலாம். தற்போது, நீங்கள் அனுப்பிய மெசேஜ்ஜை காண, குறிப்பிட்ட நபரின் தொடர்புடன் கூடிய செட் விண்டோவில் காண முடியும்.

அதே நேரத்தில், இந்த தனிப்பட்ட பதில் அளிக்கும் அம்சமானது, உங்களை தொடர்ந்து அதே குரூப்பில் இருக்க உதவும். இந்த பிரைவேட் ரிப்ளே அம்சமானது, அந்த தொடர்புடன் கூடிய உரையாடல் (கன்வெர்ஷேன்) விண்டோவுக்கு அழைத்து செல்லும்.

ஒரு குரூப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட உறுப்பினருக்கு தனிப்பட்ட முறையில் பதில் அளிக்கும் இந்த அம்சத்தை, தற்போதைக்கு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அப்ளிகேஷனை ஐஓஎஸ் பதிப்பில் பயன்படுத்துவோருக்கும் அளிக்கப்படுமா என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது விரைவில் நடைபெற கூடும் என்று தெரிகிறது.

இது தவிர, ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு, பதில் அளிக்கும் அம்சத்தை பெற ஸ்வைப் செய்தால் போதுமானது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள், வலதுபுறத்தை நோக்கிய ஸ்வைப் செய்தால், எளிய முறையில் ஒரு மெசேஜ்ஜிற்கு பதில் அளிக்க முடியும். இந்த அம்சமானது, ஏற்கனவே இந்த அப்ளிகேஷனின் ஐஓஎஸ் பதிப்பில் கிடைக்கப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

source: gizbot.com

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago