நோக்கியா, ஆப்பிள், சாம்சங், சியோமி போன்ற முன்னனி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதுவும் ஆப்பிள் ஐபோன் மாடல் கூட மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மி.காம் வலைதளத்திலும் பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விலைகுறைப்பை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் நிறுவனம் ரூ.19,000 வரை விலைகுறைத்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனை ரூ.43,990-விலையில் வாங்க முடியும்.
இந்த ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் டிஸ்பிளே, எக்ஸிநோஸ் 8895 சிப்செட்டூயல் ரியர் கேமரா, 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை ரூ.15,999 விலையில் வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தினால் ஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடலை ரூ.14,900-க்கு வாங்க முடியும்.

சியோமி ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 6எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு அமேசான்மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் இந்த சாதனத்தை எளிமையாக வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இஎம்ஐ மற்றும் எக்சேஞ் வசதி கூட உள்ளது.

நோக்கியா 6.1 பிளஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தை பிளிப்கார்ட் வலைதளத்தில் வாங்க முடியும்.

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999 விலையில்விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

source: gizbot.com

Leave a Reply